Friday, June 29, 2012

நீங்கள் கட்ட நினைக்கு வீட்டின் மாதிரி வரை படத்தை வரைய உதவும் ஸ்விட் ஹோம் மென்பொருள்



நீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். இது இலவசமாக கிடைக்கும். இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நமக்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே
வைத்திருப்பதும் இந்த மென்பொருளின் சிறப்பாக சொல்லலாம். கட்டில் சேர் போன்ற இண்டீரியர் பொருட்களின் ஸ்டேண்டர்ட் அளவுகளின் பில்ட் இன்னாக கொடுத்திருப்பதால் நம் தேவைக்கேற்ப பொருத்தி பார்த்து அறையின் அளவுகளை மாற்றி கொள்ளவும் மிக எளிதாக இருக்கிறது.

கணிதம் & அறிவியல் மாணவர்களுக்கு சிறந்த கிராபிக்ஸ் மென்பொருள்



ஆர் மென்பொருளானது மொழியியலை அடிப்படையாக கொண்டு புள்ளிவிவர கணக்கீடு மற்றும் கிராபிக்ஸ் சூழலில் உள்ளது. ஆர் ஒரு புள்ளிவிவர பரந்த வகையிலான (நேர்கோட்டு மற்றும் நேரியலற்ற மாதிரியாக்கம், கிளாசிக்கல் புள்ளிவிவர சோதனைகள், நேரம் தொடர் பகுப்பாய்வு, வகைப்படுத்தல்,
க்ளஸ்டருக்கான தொகுதிகளைள்) வரைகலை உத்திகளை வழங்குகிறது, மிகவும் நீட்டிக்கப்படக்கூடியதாக உள்ளது. எஸ் மொழி புள்ளி விவர ரீதியான வழிமுறைகளையும் பெரும்பாலும் ஆராய்ச்சி தேர்வு வாகனமாக உள்ளது.

MS OFFICE 2010ல் பழைய மெனுவை பெற எளிய மென்பொருள்



பல ஆண்டுகளாக எம்.எஸ். ஆபீஸ் 2003 ஐத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர்களுக்கு, எம்.எஸ். ஆபீஸ் 2010 தரும் ரிப்பன் வழி இன்டர்பேஸ் சிறிது தடுமாற்றத்தினைக் கொடுக்கும். ஆபீஸ் 2007 வெளியானவுடன், அதனு டைய ரிப்பன் இன்டர்பேஸ் வசதியினை ஒரு சிலர் புகழ்ந்தாலும், பலர் அதனை வரவேற் கவில்லை. தடுமாற்றத்துடன் தொடங்கிய பலரும், இதனை ஏன் மாற்றினார்கள்?

Mobile-லில் Face Book-கை இனி தமிழில் பயன்படுத்தலாம்!






சமூக தளங்களில் கோலோச்சு நிற்கும் பேஸ்புக், தனது மொபைல் பயன்பாட்டு கருவியில் தற்போது இந்திய மொழிகளையும் புகுத்தியுள்ளது. இணையதளங்களில் உலவுபவர்களில் பெரும்பாலோனோர் ஃபேஸ்புக்கில் கால் வைக்காமல் நகருவதில்லை... அப்படி அவர் ஃபேஸ்புக் பக்கம் போகவில்லை என்றால் அவர் இணையதளம் பயன்படுத்துவதே வீண் என்று சொல்லுமளவுக்கு ஃபேஸ்புக் புகழ்பெற்று உள்ளது.
பேஸ்புக் மூலம் நிறைய நண்பர்களை இணைக்கமுடியும்.

Face Book-ல் புதிய வசதி - கமன்ட் எடிட்டிங்.




புதிய கமன்ட் எடிட்டிங் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது சமூக வலைத்தளமான பேஸ்புக். போட்டோ வியூவர் போன்ற பல புதிய வசதிகளை உருவாக்கி கொடுத்த பேஸ்புக் இப்போது கமன்ட் எடிட்டிங் ஆப்ஷனையும் வழங்குகிறது. முன்பெல்லாம் நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே! என்பது போல எழுதிய கமன்ட் எழுதியது தான். அதை எடிட் செய்ய முடியாது என்று இருந்தது. அப்படியே எழுதிய கருத்தினை மாற்ற வேண்டும் என்றால் அந்த கமன்ட்டை டெலிட் செய்து,
அதன் பிறகு புதிதாக மீண்டும் கமன்ட் எழுதி போஸ்ட் செய்ய வேண்டி இருந்தது.

Wednesday, June 27, 2012

உங்கள் லேப்டாப் திருடப்படாமல் பாதுகாக்க ஒரு அறிய மென்பொருள்



இந்த கணினி உலகில் நாளுக்கு நாள் வசதிகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நம்முடைய வீட்டில் உள்ள Desktop கணினிகள் திருடப்படுவதை விட லேப்டாப் தான் அதிக அல்வாவு திருடப்படுகிறது ஏனென்றால் பாக்கெட்டில் வைத்து செல்லும் அளவிற்கு கூட தற்போது லேப்டாப்கள் வந்துவிட்டன. இதனால் திருடப்படுவதும் நாளுக்கு நாள் வசதியாகி விட்டது. இந்த பிரச்சினைகளை தவிர்க்கவே இந்த அறிய மென்பொருள் நமக்கு உதவுகிறது.

PDF பைல்களை இமேஜ்(jpg,gif,bmp,png,tif) பைல்களாக மாற்ற



PDF பைல்களை எப்படி நாம் இமேஜ் பைல்களாக மாற்றுவது என்று இங்கு காணபோகிறோம். இந்த வேலையை ஒரு சிறிய மென்பொருள் நமக்கு எளிதாக செய்து முடிக்கிறது.
இந்த மென்பொருள் பதிவர்களுக்கு மிகவும் தேவையான மென்பொருள் ஏனென்றால் நாம் ஏதேனும்PDF பைல்களை நம் பதிவில் சேர்க்க வேண்டுமென்றால் அதனை

20GB அளவுள்ள பெரிய வீடியோ பைல்களை Youtube ல் நேரடியாக அப்லோட் செய்ய



கூகுள் வழங்கு சிறந்த சேவைகளில் ஒன்று யூடியுப் தளம். இணையத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்களை அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய தளமாகும். இந்த தளத்தில் நம்முடைய வீடியோக்களையும் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. சாதாரணமாக யூடியுப் தளத்தில் சுமார் 15 நிமிட வீடியோவை தான் அப்லோட் செய்யும் வசதி உள்ளது. இதனால் பெரிய வீடியோ பைல்களை அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. ஆனால் யூடியுப் தளத்தில் 20GB அளவுள்ள 12 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ பைல்களையும் அப்லோட் செய்யும் வசதி மறைந்து

ஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் Appointment பெறும் வசதி



இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை UIDAI(Unique Identification Authority of India) என்ற அமைப்பின் மூலம் இந்திய அரசு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்த அடையாள அட்டையை வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் மட்டும் தான் இந்த அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 பேர் தான் ஒரு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.

மொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை புதிய கண்டுபிடிப்புகள்



உலகம் முழுவதும் மொபைல் போன்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது. மொபைல் போன்களில் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுக படுத்துவதே மொபைல் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக உள்ளது. விலைகுறைந்த போன்கள் முதல் விலை உயர்ந்த போன்கள் வரை அனைத்து மொபைல்களுக்கும் தேவையான ஒரு அடிப்படை விஷயம் சார்ஜ் போடுவது. இப்பொழுது அனைவரும் மின்சாரம் மூலம் தான் போடுகிறோம். மின்சாரம் இல்லை என்றால் நம் மொபைலை சார்ஜ் போடாமல் உபயோகிக்க முடியாத நிலை உள்ளது.

இந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் காண



இணையம் வாசகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் இணையதளங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. நம் இந்திய அரசும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மற்றும் மாவட்டங்களுக்கும் தனித்தனி இணையதளங்களை உருவாக்கி தங்கள் தகவல்களை இணையத்தில் வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த இணையதளங்கள் அனைத்தயும் URL நாம் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது. உதாரணமாக இந்தியாவில் 627 மாவட்டங்கள் உள்ளது இதில் 569 மாவட்டங்களுக்கு தனி இணையதளங்கள் உள்ளது. இதை எல்லாம் நாம் ஞாபகம் வைத்து கொள்வது

Sunday, June 24, 2012

இன்டர்நெட் வேகம் குறைவாக உள்ள கணினிகளுக்கு - Opera11.11 latest version



இணையம் என்னும் கடலில் நீந்துவதற்கு நமக்கு பயன்படுவது இணைய உலவிகளாகும். இந்த இணைய உலவிகளில் பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது IE,Chrome,Firefox போன்ற உலவிகளாகும். இதற்க்கு அடுத்ததாக அனைவராலும் விரும்பி உபயோகப்படுத்தப்படுவது Opera என்ற என்ற உலவியாகும். இந்த உலவியிலும் வசதிகள் மிக ஏராளம் குறிப்பாக இந்த பிரவுசரில் இணைய வேகம் மிகவும் பிரமாதமாக உள்ளது.  வேகம் குறைவான இணைய இணைப்பு வைத்து இருந்தாலும் இந்த உலவி மூலம் வேகமாக இணையத்தை பயன்படுத்தலாம்.
பயன்கள்:
  • நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Fastest Java Script engine கொண்டுள்ளது.

உங்கள் Facebook நண்பர்களின் முழுவிவரமும் ஒரே இடத்தில் அறிய




பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். உதாரணமாக இந்த மாதத்தில் யாருக்கெல்லாம் பிறந்த நாள் வருகிறது அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்கள் நண்பர்கள் லிஸ்டில் ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவரின் கணக்கிற்கும் சென்று பார்க்க வேண்டும். இது நடக்கிற காரியம் இல்லை. ஆகவே இதுபோன்ற விவரங்களை ஒரே இடத்தில் அறிய ஒரு சூப்பர் வழி உள்ளது. இதன் மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் மேலதிகமான தகவல்களை ஒரே இடத்தில் அறியலாம்.

இணையத்தில் Torrent பைல்களை Download செய்ய சிறந்த 10 தளங்கள்




நாம் இணையத்தில் இருந்து பெரிய பைல்களையும் மற்றும் திரைப்படங்கள், கட்டண மென்பொருட்கள் ஆகியவைகளை இலவசமாக டவுன்லோட் செய்ய வேண்டுமென்றால் டோரென்ட் மூலமாக தான் டவுன்லோட் செய்வோம். இணையத்தில் டோரென்ட் பைல்களை டவுன்லோட் செய்யஏராளமான தளங்கள் உள்ளன. இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட தளங்களே வாசகர்களுக்கு மிக சிறந்த சேவையை தருகின்றன. அதில் சிறந்த பத்து தளங்களை கீழே அதில் உள்ள வசதிகளுடன் பட்டியலிட்டு உள்ளேன் கீழே பார்த்து பயனடைந்து கொள்ளவும்.

கூகுளில் நீங்கள் கேட்பதை உங்கள் மெயிலுக்கே அனுப்புவார்கள்



இணையம் என்பது பல எண்ணிலடங்கா தகவல்களை அடக்கியுள்ளது. இந்த இணையத்தில் கேட்டால் கிடைக்காத தகவல் எதுவுமே கிடையாது. இப்படி பறந்து விரிந்து உள்ள இணையத்தில் நாம் நமக்கு தேவையான தகவல்களை சுலபமாக பெற தேடியந்திரங்கள் உதவுகின்றன. இந்த தேடியந்திரங்களில் சிறப்பான சேவையை வழங்குவது கூகுள் இணையதளமாகும். இந்த கூகுளில் கேட்டால் கிடைக்காத ஒன்று இல்லவே இல்லை. இன்னும் ஒரு படி மேலே போய் நாம் கேட்பதை நமது மெயிலுக்கே கொண்டு வந்து சேர்க்கும் வசதியும் இந்த கூகுளில் உள்ளது. இதில் பதிவு செய்து விட்டால் புது புது தகவல்கள் நம்மை தேடி வரும்.

இலவச Computer Game-களை Download செய்ய சிறந்த 4 Websites




கணினி வைத்திருக்கும் அணைத்து கணினியிலும் எது இருக்கோ இல்லையோ இந்த கேம்கள் மட்டும் தவறாமல் இருக்கும். அப்படி இல்லையென்றாலும் நம்ப குழைந்தைகளின் வற்புறுத்தலுக்கு நாம் இணையத்தில் கணினி கேம்களை தேடினால் ஆயிரம் தளங்கள் வரும் ஆனால் இந்த லிங்கில் க்ளிக் செய்யுங்க முதலில் உறுப்பினர் ஆகுங்க அப்புறம் கடைசியா டிரையல் பதிப்பை கொடுத்து முழுபதிப்பு பதிப்பு வேண்டுமென்றால் இவ்வளவு காசு கட்டுங்க என்று கூறுவார்கள். நம்மில் இந்த நிலைமை பல பேருக்கு ஆகி இருக்கலாம். அந்த பிரச்சினைகளை தவிர்க்கவே கணினிக்கு இலவச விளையாட்டுக்களை டவுன்லோட் செய்யும்

ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்


இப்பொழுது இலவசமாக கிடைக்காதது எதுவுமே இல்லை. இணையத்தில் இலவச மென்பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே கொண்டே வருகிறது. அந்த வரிசையில் மேலும் ஒரு பயனுள்ள மென்பொருள் இந்த Liberkey 5.2.0321 என்ற மென்பொருளாகும். இந்த மென்பொருளில் சுமார் 309 போர்டபிள் மென்பொருட்கள் அடங்கி உள்ளது. இதில் உள்ள மென்பொருட்கள் அனைத்தும் நம் கணினிகளுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருட்கள். இந்த மென்பொருட்களில் மென்பொருட்கள் பல வகைகளாக பிரிக்கப்பட்டு வாசகர்கள் சுலபமாக உபயோகிக்கும் வண்ணம் அமைத்து இருக்கிறார்கள்.
  • இந்த மென்பொருளை டவுன்லோட் செய்தவுடன் உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். 
  • பிறகு அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் உள்ள Liberkey Tools - Manage applications - Install an application Suite இந்த முறையில் க்ளிக் செய்யுங்கள்.
  • அடுத்து உங்களுக்கு வேறு விண்டோ வரும். அதில் உள்ள Download the list of available suits என்ற பட்டனை க்ளிக் செய்யவும். 
  • வரும் விண்டோவில் இதில் உள்ள மென்பொருட்களின் List Basic Suite matrum Standard Suite என்று இரு வகையாக  பிரிக்க பட்டிருக்கும்.
  • அதில் கீழே உள்ள Install all applications on the Selected tool என்ற பட்டனை அழுத்தி மென்பொருட்களை நிருவிகொல்லுங்கள்.
  • இதில் உங்களுக்கு வேண்டாத அல்லது உங்களிடம் ஏற்கனவே உள்ள மென்பொருட்களை டிக் குறியை எடுத்துவிட்டு நீக்கி விடலாம்.


  • இப்பொழுது உங்களுக்கு தேவையான மென்பொருள் இந்த liberkey மென்பொருளில் சேர்ந்து விடும். 
  • இந்த மென்பொருட்களை உங்கள் கணினியில் நிறுவ வேண்டாம். நேரடியாக உங்களுக்கு தேவையான மென்பொருளை க்ளிக் செய்து உபயோகித்து கொள்ளலாம்.

ஜிமெயிலில் மற்ற ஐடிகளுக்கு வரும் மெயிலின் காப்பியை வரவைக்க



பெரும்பாலானவர்கள் ஒன்றிற்கும் மேற்ப்பட்ட மெயில் கணக்கை வைத்திருப்போம். ஒன்று பொதுவாகவும் ஒன்று வியாபாரம் சம்பந்தப்பட்ட விவரங்களுக்கும் மற்றும் அவரவரின் தனி தனி தேவைகளுக்கு என்று நாம் தனி தனியாக வைத்து கொள்வோம். அப்படி வைத்திருக்கும் போது நாம் ஒரு மெயிலை பார்த்து கொண்டிருப்போம் அடுத்து  மெயில் முகவரியில் பார்க்க வேண்டுமென்றால்

Thursday, June 21, 2012

அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய மென்பொருள் - Auto Saver



நாம் கணினியில் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்போம் முழுவதும் செய்து முடித்துவிட்டு தெரியாமல் Save செய்யாமல் மூடிவிடுவோம். அல்லது நாம் வேலை செய்து கொண்டிருக்கும் போதே தொழில்நுட்ப கோளாறால் திடீரென நம் கணினி முடங்கி நிற்கும் அந்த சமயத்தில் நாம் Endtask செய்தோ அல்லது கணினியை Restart செய்தோ திரும்பவும் கணினியை இயங்கும் நிலைக்கு கொண்டு வரும் அப்படி வரும்போது நாம் கணினியில் கடைசியாக செய்த வேலை Save செய்ய மறந்திருப்போம் இது போல சமயங்களில் இந்த மென்பொருள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஜிமெயில் சுலபமாக உபயோகிக்க முக்கியமான Gmail Shortcut Keys



இன்று இணைய உலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தை அடைந்துள்ளது கூகுள் நிறுவனம். அந்த நிறுவனம் எதில்  கால்வைத்தாலும் வெற்றி தான். அந்த நிறுவனம் வாசகர்களுக்கு பல எண்ணற்ற வசதிகளை வெளிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் ஒன்று தான் Gmail ஆகும். நம்மில் பெரும்பாலானோர் கூகுள் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். இதை இன்னும் எளிதாக உபயோகிக்க இங்கே Shortcut கீகள் கொடுத்துள்ளேன். இதில் முக்கியமானதை மட்டும் தொடுத்துள்ளேன். 
இந்த வசதியை பயன்படுத்த முதலில் நீங்கள்

ஜிமெயிலை உங்கள் விருப்பம் போல் அழகாக்கலாம்



ஜிமெயிலில் உள்ள வசதிகளை பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரு மாதம் முழுவதும் பதிவு போட்டாலும் முடியாது அந்த அளவிற்கு வசதிகளை கொண்ட ஒரே மெயில் நிறுவனம் தான் இந்த ஜிமெயில். இதில் இருக்கும் இன்னொரு அழகான வசதி நம்முடைய ஜிமெயிலின் பக்கத்தை நாம் நம் விருப்பம் போல் அழகு படுத்தி கொள்ளலாம்.

ஜிமெயிலில் புதிய வசதி - Auto Advance



பொதுவாக நாம் ஜிமெயிலில் ஏதேனும் மெயிலை delete செய்தாலோ அல்லது archive செய்தாலோ நம்முடைய விண்டோ திரும்பவும் முகப்பு பக்கத்துக்கே(inbox) சென்று விடும் நாம் திரும்பவும் மெயிலை க்ளிக் செய்து தான் நாம் அடுத்த மெயிலை delete மற்றும் archive செய்ய முடியும். இனி அது போல் செல்ல வேண்டியதில்லை நாம் ஒரு மெயிலை delete செய்தால் நம் விண்டோ இன்பாக்ஸ்க்கு செல்லாமல் அட்டோமேடிக்காக அடுத்த மெயில் ஓபன் ஆகியிருக்கும்.
இந்த வசதி ஏற்கனவே யாகூவில் உள்ளது.

ஜிமெயில் லேபில்(Lab) தவிர்க்க கூடாத 4 வசதிகள்



கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவையை தரும் ஜிமெயிலில் பல எண்ணற்ற வசதிகள் நிரந்து உள்ளன. ஜிமெயிலில் Lab என்ற பகுதியில் இந்த வசதிகள் இருக்கின்றன. இதில் உள்ள சில முக்கியமான மிகவும் பயனுள்ள வசதிகளை பற்றி இங்கு காண்போம்.

1) OFFLINE:
இந்த வசதி மிகவும் பயனுள்ள வசதி. நம் கணினியில் இணைய இணைப்பு இல்லாத போதும் நமக்கு வந்து இருக்கும் புதிய மெயில்களை இந்த வசதியை ஆக்டிவேட் செய்வதன் மூலம் பெற்று கொள்ளலாம்.
SETTINGS- OFFLINE - க்ளிக் செய்து இந்த வசதியை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். ஆனால் ஜிமெயிலில் MULTIPLE SIGNIN ஆக்டிவேட் செய்து இருந்தால் இவ்வசதியை பெற முடியாது. https://www.google.com/accounts/b/0/MultipleSessions இந்த லிங்கில் சென்று MULTIPLE SIGN IN வசதியை செயலியக்க செய்துவிட்டு இதனை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.

2. PICTURE IN CHAT
நாம் ஜிமெயில் நம் நண்பர்களுடன் இலவசமாக அரட்டை அடித்து கொள்வோம். அப்படி அரட்டையில் இருக்கும் போது நாம் ஏதேனும் செய்தி அனுப்பினால் நம்முடைய படம் தெரிவதற்கு இந்த வசதியை ஆக்டிவேட் செய்து விடுங்கள். இதற்க்கு SETTINGS- LABS- PICTURE IN CHAT - ENABLE -SAVE CHANGES.
3. UNDO SEND
நாம் அவசர அவசரமாக ஏதேனும் தவறான மெயிலோ அல்லது முகவரி மாற்றியோ மெயில் அனுப்பிவிட்டால் அதை போகாமல் தடுக்க இந்த வசதி பயன் படுகிறது. இதற்க்கு SETTINGS- LABS - UNDO SEND - ENABLE - SAVE CHANGES- க்ளிக் செய்து இதை ஆக்டிவேட் செய்தவுடன் மறுபடியும் GENERAL க்ளிக் செய்து உங்களின் நேர அனுப்பிய மெயிலை தடுக்கும் நேர இடைவெளியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

4. RIGHT CHAT
நம்முடைய ஜிமெயிலில் உள்ள சட பகுதியை இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்திற்கு கொண்டு வர இந்த வசதியை செயல் படுத்தி கொள்ளுங்கள். இதற்க்கு SETTINGS - LABS - RIGHT-SIDE CHAT - ENABLE - SAVE CHANGES. 

ஜிமெயிலில் மிகவும் பயனுள்ள புதிய வசதி- Restore deleted Gmail Contacts



பெரும்பாலானவர்கள் உபயோகிக்கும் கூகுள் நிறுவனம் வழங்கும் ஜிமெயில் வசதியை பயன்படுத்துகிறோம். முன்பு இதில் நாம் தவறுதலாக நம்முடைய காண்டக்ட் லிஸ்ட்டை ஒட்டுமொத்தமாக டெலீட் செய்து விட்டால் அவ்வளவு தான் அந்த காண்டக்ட் லிஸ்ட் திரும்ப பெற மிகவும் சிரமம் பட  வேண்டி இருக்கும்.  சில முக்கிய முகவரிகளை அழித்து விட்டால் நமக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும்.
இந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ஜிமெயில் நிறுவனம் தற்போது புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளது. அதாவது நம்முடைய மெயிலில் உள்ள காண்டக்ட் லிஸ்ட் ஓட்டு மொத்தமாக டெலீட் செய்தால் கூட அடுத்த வினாடியே அதை திரும்பவும் கொண்டு வந்து விடலாம். ஆனால் நீங்கள் டெலீட் செய்து 30 நாட்களுக்குள் இருக்க வேண்டும்.
  • உங்கள் ஜிமெயிலில் www.gmail.com அக்கௌன்ட்டில் நுழைந்து கொள்ளுங்கள். நுழைந்து Contact என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  • படத்தில் காட்டியுள்ளதை போல Contacts என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் More Actions என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  • அதில் குறிப்பிட்டு காட்டி இருக்கும் Restore contact என்பதை க்ளிக் செய்யுங்கள். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.
  • இதில் உங்களுக்கு தேவையான கால இடைவெளியை தேர்வு செய்து Restore என்ற பட்டனை அழுத்துங்கள். முக்கியமானது இதில் அதிகபட்சமாக நீங்கள் 30 நாட்களுக்குள் டெலீட் செய்து இருந்தால் மட்டுமே முகவரிகளை திரும்ப கொண்டு வரமுடியும் 
  • நீங்கள் Restore பட்டனை அழுத்திய அடுத்த வினாடியே நீங்கள் தேர்வு செய்த கால இடைவெளிக்குள் அழித்த அனைத்து முகவரிகளும் வந்து விடும். 

  • நீங்கள் வேண்டுமென்றே உங்கள் காண்டக்ட் லிஸ்ட் அழித்து திரும்பவும் கொண்டும் வரலாம் (என்ன காசா பணமா).

ஜிமெயில் டேபில் நாம் படிக்காத மெயில்களின்(Unread Mails) எண்ணிக்கையை வர வைக்க



ஜிமெயிலில் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுக படுத்தி கொண்டே உள்ளனர். நம்முடைய ஜிமெயில் இன்பாக்ஸில் உள்ள நாம் படிக்காத மெயில்கள் எத்தனை உள்ளன என்ற எண்ணிக்கை நமது இன்பாக்ஸ் பகுதியில் தெரியும். அதை எப்படி நம் டேபிள் (Tab) தெரிய வைப்பது என காணலாம்.



  • முதலில் உங்கள் ஜிமெயில் www.gmail.com கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • அடுத்து Settings என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  • அடுத்து அதில் உள்ள Lab என்பதை க்ளிக் செய்யுங்கள். அங்கு Unread message icon என்ற பகுதிக்கு சென்று கீழே படத்தில் காட்டி இருப்பதை போல Enable என்பதை க்ளிக் செய்து கீழே உள்ள SAVE CHANGES என்பதை க்ளிக் செய்து விடுங்கள். 

  • இப்பொழுது உங்கள் ஜிமெயில் டேபில் பாருங்கள் நீங்கள் படிக்காத மெயில்களின்  எண்ணிக்கை தெரியும்.
 டிஸ்கி: இந்த வசதி கூகுள் குரோம்6 அதற்கு மேல், பயர்பாக்ஸ் 2 அதற்கு மேற்ப்பட்ட உலவிகளில் மட்டுமே இயங்கும்.

குரோம் நீட்சி- Goo.gl URL Shortner

நாம் அனைவருக்கு இந்த URL Shortner வசதியை பற்றி தெரிந்திருக்கும். நம்முடைய பெரிய URL களை சுருக்கி சிறியதாக மாற்றவே நாம் இந்த வசதியை பயன் படுத்துகிறோம். (மேலும் இதை பற்றி அறிய இதை பாருங்கள்) இதில் நாம் ஒரு url சுருக்க அந்த தளம் சென்று தான் செய்ய முடியும். இந்த நீட்சியை நிறுவி விட்டால் அப்படி செய்ய வேண்டியதில்லை நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் பக்கத்தின் URL சுருக்க வேண்டுமா இந்த ஐகானை க்ளிக் செய்தால் போதும் அந்த பக்கத்திற்கான சுருக்கிய URL namakku கிடைத்து விடும். அதை நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

ஜிமெயிலில் பயனுள்ள புதிய வசதி - Incoming Mail and Chat Alert



நாம் எந்த நேரமும் ஆன்லைனிலேயே இருக்க முடியாது. அந்த நேரத்தில் நமது ஜிமெயில் முகவரிக்கு வரும்  ஏதேனும் முக்கியமான மெயில் அல்லது முக்கிய நபரிடம் இருந்து Chat வந்தாலோ அவை நாம் மறுபடியும் எப்பொழுது ஜிமெயிலை திறக்கும் போது தான் தெரிய வரும். இதன் மூலம் சில முக்கியமான சாட்டிங் நாம் தவற விட்டு விடுவோம். அல்லது நமக்கு வந்துள்ள முக்கிய மெயிலை காலம் தாழ்ந்தே படிக்க கூடிய பிரச்சினை இருந்தது. இனி அந்த பிரச்சினை நமக்கு இருக்காது.  ஜிமெயிலில் ஒரு புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளனர் அதாவது DESKTOP NOTIFICATIONS EMAIL AND CHAT என்பதாகும். 
இனி நாம் ஆப்லைனில் இருந்தாலும் நமக்கு ஏதேனும் முக்கிய மெயில் வந்தாலோ அல்லது நமக்கு ஏதேனும் சாட் வந்தாலோ இனி நமக்கு ஒரு அறிவிப்பு செய்தி வரும். அதை பார்த்து முக்கிய நபரிடம் இருந்து வந்தால் நாம் அதை தவறவிடாமல் உடனே அதற்க்கு பதில் அளிக்கலாம்.
 புதிய மெயில் வந்தால் 

புதிய சாட்டிங் வந்தால் 

  • இந்த வசதியை பெற இந்த லிங்கில் க்ளிக் செய்து www.gmail.com உங்கள் ஜிமெயில்  கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • பின்பு ஜிமெயிலில் Settings க்ளிக் செய்யுங்கள்.
  • பிறகு அங்கு உள்ள Destop Notification வசதிக்கு சென்று கீழே படத்தில் உள்ள மாதிரி தேர்வு செய்யவும்.
  • படத்தில் உள்ளதை போல தேர்வு செய்ததும் கீழே கடைசியில் உள்ள SAVE CHANGES என்ற பட்டனை க்ளிக் செய்து உங்கள் மாற்றத்தை சேமித்து கொள்ளுங்கள்.
  • அவ்வளவு தான் இனி எப்பொழுதும் ஆன்லைனில் இருந்து கொண்டு மெயில் வருமா,வருமா என பார்த்து கொண்டு இருக்க தேவையில்லை புதிய மெயில் வந்தால் நாம் ஆப்லைனில் இருந்தாலும் நமக்கு அறிவிப்பு செய்தி வரும்.
  • சாட்டிங் வந்தாலும் இப்படி நமக்கு செய்தி வரும்.
டிஸ்கி: இந்த வசதியை தற்பொழுது கூகுள் குரோம் உலவி உபயோகிப்பவர்கள் மட்டுமே பெற முடியும். 

அனைவருக்கும் பயனுள்ள கூகுளின் Url Shortener சேவை



URL SHORTENER சேவை. நாம் நம்முடைய பதிவில் பதிவிற்கு சம்பந்தமான லிங்க் மிக பெரியதாக இருக்கும். வாசகர்கள் அதை ஞாபகம் வைத்து கொள்வது கடினமாமாக இருக்கும். எவ்வளவு பெரிய URL ஆக இருந்தாலும் அதை சுருக்கி மிக சிறியதாக கொடுக்கும்.
பயன்கள்:
  • நீங்கள் பகிர நினைக்கும் URL சுருக்கி கொடுப்பதனால் நீங்கள் ட்விட்டர்

ஜிமெயில் கணக்கில் உங்களின் பேஸ்புக்கை கொண்டுவர



பேஸ்புக் என்பது நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்துவரும் வரும் இணைய தளம். தனி தளமாக ஒப்பீடு செய்தால் இது கூகுளையே பின்னுக்கு தள்ளிவிடும். கூகுளுக்கு நிறைய கிளை தளங்கள் இருப்பதால் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதெல்லாம் நமக்கெதுக்கு விஷயத்துக்கு வருவோம். நாம் இந்த பேஸ்புக் மற்றும் ஜிமெயிலையும் உபயோகித்தால் இவை இரண்டையும் தனித்தனியாக திறந்து பார்க்க வேண்டும் ஆனால் பேஸ்புக்கை நம்முடைய ஜிமெயில் கணக்கில் இணைத்து விட்டால் பேஸ்புக் தளத்திற்கு வராமலே ஜிமெயிலில் இருந்தே பேஸ்புக் அப்டேட்களை பார்த்து கொள்ளலாம்.

உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் ஹாக் செய்யாமல் தடுக்க



எவ்வளவு தான் பாதுகாப்பாக நாம் ஜிமெயிலை உபயோகித்தாலும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் பாஸ்வேர்ட்களை அறிந்து நம்முடைய கணக்கை முடக்கிவிடுவதால் நம்முடைய ஜிமெயிலும் பறிபோகிறது மற்றும் பெரும்பாலும் நாம் உபயோகித்து கொண்டிருக்கும் கூகுள் தளங்களான பிளாக்கர்,யூடியுப்,ஆர்குட் போன்ற தளங்களில் நம் கணக்கை நாம் இழக்கும் அபாயமும் உள்ளது. ஆகவே நம்முடைய ஜிமெயில் கணக்கை எப்படி பாதுக்காப்பாக உபயோகிப்பது என்று கீழே பாருங்கள்.

  • முதலில் உங்கள் ஜிமெயிலை திறந்து அதில் Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.

Wednesday, June 20, 2012

ஜிமெயிலில் பயனுள்ள புதிய வசதி - Smart Labels



தற்போது கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதில் குறிப்பாக செய்தி பரிமாற்றத்திற்கு மெயில்களை பயன்படுத்துவது அதிகரித்து கொண்டே போகிறது. கூகுள் வழங்கும் மெயில் நிறுவனமான ஜிமெயிலை பெரும்பாலனாவர்கள் உபயோகித்து கொண்டு இருக்கிறோம். இதில் நமக்கு வரும் மெயில்களை தனி தனியாக பிரித்து அறிந்து கொள்ள லேபில் வசதியை பயன்படுத்துகிறோம். இருந்தும் பல லேபில்கள்

ஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Long label names



தற்போது கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதில் குறிப்பாக செய்தி பரிமாற்றத்திற்கு மெயில்களை பயன்படுத்துவது அதிகரித்து கொண்டே போகிறது. கூகுள் வழங்கும் மெயில் நிறுவனமான ஜிமெயிலை பெரும்பாலனாவர்கள் உபயோகித்து கொண்டு இருக்கிறோம். அதற்கேற்ற படி ஜிமெயில் நிறுவனமும் தினம் ஒரு புதிய வசதிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்கிறது. இந்த நிலையில் ஜிமெயில் நிறுவனம் நமக்கு ஒரு புதிய வசதியை கொடுத்துள்ளது.

நாம் ஜிமெயிலில் நமக்கு வரும் மெயில்களை சுலபமாக வேறுபடுத்தி அறிந்து கொள்ள எதுவாக லேபில்

ஜிமெயில் Contacts -களை உங்கள் நண்பர்களின் மெயிலுக்கு சுலபமாக அனுப்ப






தற்போது கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதில் குறிப்பாக செய்தி பரிமாற்றத்திற்கு மெயில்களை பயன்படுத்துவது அதிகரித்து கொண்டே போகிறது. கூகுள் வழங்கும் மெயில் நிறுவனமான ஜிமெயிலை பெரும்பாலனாவர்கள் உபயோகித்து கொண்டு இருக்கிறோம். இந்த ஜிமெயிலில் நம் கணக்கில் உள்ள தொடர்பு முகவரிகளை (contacts) எப்படி நம் நண்பர்களின் மெயில் முகவரிக்கு அனுப்புவது என கீழே காணலாம்.

Monday, June 18, 2012

ஜிமெயிலில் புதிய பயனுள்ள சூப்பர் வசதி - People Widget



ஜிமெயில் இன்று உலகின் மூலை முடுக்குகளிலும் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு மெயில் சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுக படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது.  இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் ஜிமெயில் சேவை பாராட்டுக்குரியதே. சமீபத்தில் தான்  இந்த முறையில் மேலும் ஒரு பயனுள்ள வசதியை நமக்கு அறிமுக படுதிள்ளது இந்த ஜிமெயில் நிறுவனம்.

  • இனி உங்களுக்கு வரும் மெயில்களை ஓபன் செய்தால் அந்த மெயிலின் வலது பக்கத்தில் people widget என்ற புதிய பகுதி இருப்பதை பாருங்கள்.