Friday, February 28, 2014

Whatsapp Messenging Application - ஒரு பார்வை

வாட்ஸ்அப் என்றால் என்ன? 


வாட்ஸ்அப் என்பது ஒரு ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மெசேஜிங் அப்ளிகேஷன். இதன் மூலம் எஸ்.எம்.எஸ், வீடியோக்கள், குரல்வழி செய்திகள் (Audio Message), லிங்ஸ் எனப்படும் இணைய சுட்டிகள் போன்றவற்றை ஸ்மார்ட்போன் மூலம் அனுப்ப முடியும்.

குறுஞ்செய்தி அனுப்புவதற்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட இந்த அப்ளிகேஷன் மூலம் மேற்குறிப்பிட்ட அனைத்தையும் செயல்படுத்த முடியும்.




வாட்ஸ்அப் அப்ளிகேஷனை கண்டுபிடித்தவர்கள்: 


பிரைன் அக்டன் மற்றும் ஜேன் கோம் என்ற இருவர் இணைந்து கண்டுபிடித்ததுதான் இந்த அப்ளிகேஷன். இவர்கள் இருவரும் பிரபல யாஹூ நிறுவனத்தில் பணியாற்றியவர்கள். 

எந்தெந்த நிறுவன சாதனங்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தலாம்?


தற்பொழுது வெளிவந்துள்ள அனைத்து வகையான ஸ்மார்ட்போன்களிலும், ஆப்பிள், பிளாக்பெர்ரி, ஆண்ட்ராய்ட், விண்டோஸ், சிம்பியன் இயங்குகளில் செயல்படும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் இந்த வாட்ஸ் அப் பயன்படுத்தலாம். 

மேசேஜ் சேவைக்காக தொடங்கப்பட்ட அந்த அப்ளிகேஷன் மூலம் 40 கோடிக்கும் அதிகமான மக்கள் மேசேஜ்களை அனுப்பி பெறுகின்றனர். இந்த அப்ளிகேஈன் தொடங்கப்பட்ட நான்கு ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளது. 

சமீபத்தில் வெளியான கிட்காட் பதிப்பு ஸ்மார்ட் போன்கள் முதல், நோக்கியா விண்டோஸ் 8 ,நோக்கியா ஆஷா போன்ற மொபைல்கள் வரைக்கும் அனைத்து விதமான ஸ்மார்ட் மொபைல்களிலும் இந்த அப்ளிகேஷன்களை பயன்படுத்தலாம் என்பது சிறப்புத் தகவல்கள். 

ஸ்மார்ட் போன் உலகமாக மாறிவரும் இச்சூழலில் இந்த அப்ளிகேஷனின்றி எந்த ஒரு ஸ்மார்ட் போனும் இருக்காது என்ற அளவிற்கு இதனுடைய வளர்ச்சியும், பயன்பாடும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இந்தியாவில் வாட்ஸ் அப்: 


இந்தியாவில் மட்டும் இந்த அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து கோடி என தெரியவந்துள்ளது. இதைப்பற்றி இந்நிறுவனத்தின் இந்திய கிளையின் தலைவர் நீரஜ் அலோரா அவர்கள், "இந்தியாவில் WhatsApp. 

WhatsApp with Tata docomo - டாடா டொகோமோவுடன் வாட்ஸ் அப்

சமீபத்தில் டாட்டோ டொகோமோ நிறுவனத்துடன் கைகோர்த்துக்கொண்டது. இந்த ஒப்பந்த்ததின் டாட்டா டொகோம நிறுவன மொபைல்களைப் பயன்படுத்துவோர்கள் ரூபாய் 15 செலுத்தி, 15 நாட்களுக்கு அளவற்ற வாட்ஸ் அப் பயன்பாட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். 


Reliance with WhatsApp - ரிலையன்சும் வாட்ஸ் அப்பும். 


இந்தியாவில் கடந்த ஆண்டே ரூபாய் 16 செலுத்தி ஒரு மாதத்திற்கு அளவற்ற வாட்ஸ்அப் பயன்பாட்டினை பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்கியது. அதைத் தொடர்ந்து தற்பொழுது டாடா டொகோமோ நிறுவனமும் தனது வாடிக்கையாளருக்கு இந்த வாட்ஸ்அப் சேவையினை வழங்கியிருப்பதால் மேலும் இதன் பயனாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். 

இனி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் SMS சார்ந்த உடனடி தகவல் தொடர்பு பரிமாற்றத்திற்கு (For Instant Messaging) வாட்ஸ் அப் அப்ளிகேஷனை பயன்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை..

No comments:

Post a Comment