Sunday, January 13, 2013

எக்ஸ்புளோரரில் நாம் விரும்பும் போல்டர்


விண்டோஸ் 7 சிஸ்டத்தில், நாம் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்தவுடன், நாம் இருப்பது லைப்ரரீஸ் (Libraries) பிரிவில். இதில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது நல்ல ஏற்பாடாக இருக்கும். ஆனால், எனக்கு இது தேவையில்லை என்று எண்ணுபவர்கள், எக்ஸ்புளோரர் வேறு ஒரு போல்டரில் திறக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். குறிப்பிட்ட ஒரு போல்டரில் திறக்கப்பட எப்படி செட் செய்திட வேண்டும்
என்பதனை இங்கு பார்க்கலாம்.
முதலில் டாஸ்க் பாரில் உங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரர் ஐகான் எங்குள்ளது எனப் பார்க்கவும். அல்லது ஸ்டார்ட் கிளிக் செய்து Windows Explorer என சர்ச் பாக்ஸில் டைப் செய்திடவும். ஐகான் கிடைத்தால், வலது கிளிக் செய்து கிடைக்கும் கீழ்விரி பட்டியலில் Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Shortcut என்ற டேப்பின் கீழ், குறிப்பாக Target என்பதனை அடுத்து உள்ள டெக்ஸ்ட் இன்புட் பாக்ஸைக் கவனிக்கவும். இங்கு நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொடக்க நிலையில் திறக்க விரும்பும் போல்டரின் முகவரியினை %windir%\explorer.exe என்பதனை அடுத்து டைப் செய்திடவும். இதற்கு இன்னொரு எளிய வழியும் உண்டு. நீங்கள் விரும்பும் போல்டருக்கு பிரவுஸ் செய்துசென்று, அதன் அட்ரஸ் பாரில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Copy address as text என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து, பின்னர் டெக்ஸ்ட் இன்புட் பாக்ஸில் அப்படியே பேஸ்ட் செய்துவிடவும். இதன் பின்னர், Apply என்பதில் கிளிக் செய்து, அதன் பின்னர் OK கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து, விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறந்தால், நீங்கள் செட் செய்த போல்டர் தயாராகத் திறக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். மீண்டும் மாற்ற வேண்டும் எனில், மேலே சொன்ன அதே நிலைகளில் சென்று மாற்றவும்.

No comments:

Post a Comment