Friday, May 31, 2013

Skype உரையாடல்களை பதிவுசெய்வதற்கான மிகச்சிறந்த இலவச மென்பொருட்கள்.


இணைய வழித்தொடர்பாடலில் Skype பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக மிக அதிகம். இணையப்பாவனையாளர்களில்  Skype பயன்படுத்தாதோர் எவருமில்லை என்றே கூறலாம். அந்தளவுக்கு அதன் இலவசமும் இலகுவான பயன்பாட்டுத் தன்மையும் அதையொத்த இணையவழி தொடர்பாடல் சேவை வழங்கிகளை விட மிகவும் சிறந்தவை.
Skypeஇல் பல வசதிகள் காணப்பட்டாலும் இதுவரையிலும்   Skype உரையாடல்களை பதிவு(Record) செய்வதற்கு நேரடியாக எந்த தெரிவுகளும் வழங்கப்படவில்லை. மாறாக இத்தகைய தேவைப்பாடுகளை தீர்க்க Skype Shop இல் மேலதிக அப்ளிக்கேஸன்களை தரவிறக்கம் செய்யலாம் என்றாலும் எல்லா நாடுகளிலும் Skype Shop வசதியை இன்னமும் Skype வழங்கவில்லை.
அவ்வாறெனில் இலகுவாக Skype உரையாடல்களை பதிவுசெய்வது எப்படி?
இணையத்தில் இந்த வேலையை செய்வதற்கென பல இலவச மூன்றாந்தரப்பு மென்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் மிகச்சிறந்த சிலவற்றை கீழே பார்க்கலாம்.
 குழுமம் வழங்கும் Free Video Call Recorder for Skype மென்பொருள்  Skype உரையாடல்களை பதிவுசெய்ய மிகவும் சிறந்தது.
இதில் உள்ள சிறப்பு என்ன வென்றால், இதிலுள்ள 3 தெரிவுகளில் உங்கள் விருப்பம் போல Skype உரையாடல்களை பதிவுசெய்ய முடியும். அதாவது
1)Picture in Picture- இருபக்க வீடியோ மற்றும் ஓடியோ உரையாடல் பதிவு
2)Only Video Of Other Side- ஏதாவது  ஒருபக்க வீடியோ உட்பட இருபக்க ஓடியோ பதிவு
3)Only Audio- இருபக்க ஓடியோ பதிவு மட்டும்
இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். பின்னர் ஸ்கைப் உரையாடல்களை பதிவு செய்ய வேண்டிவருமிடத்து Taskbarஇலுள்ள இந்த மென்பொருளின் ஐகானை அழுத்தி திறந்துகொண்டு உங்களுக்கு விருப்பமான Record Modeஇனை தெரிவுசெய்துவிட்டு Record பொத்தானை அழுத்துங்கள். அவ்வளவுதான் உங்கள் Skype உரையாடல் பதிவுசெய்யப்படும்.
தரவிறக்க இணைப்பு - Free Video Call Recorder for Skype
இதனை விடுத்து மேலும் சில பாவனைக்கு இலகுவான Skype Video Call Recorder மென்பொருட்கள் உள்ளன. அவற்றையும் பார்த்துவிடலாம்.

No comments:

Post a Comment