Sunday, June 30, 2013

பார்கோட் - சில பயன்மிக்க தகவல்கள்


 Barcode - some useful information

நம்மில் பலர் பார்கோட் (Barcode) என்றால் என்ன? தெரிந்து வைத்திருப்போம். ஒரு சிலருக்கு பார்கோட் என்றால் பொருட்களில் ஒட்டப்பட்டிருக்கும் கோடு போட்ட ஸ்டிக்கர் (barcode sticker) என்ற அளவில் மட்டுமே தெரியும். 

உண்மையிலேயே பார் கோட் என்றால் என்ன? அதன் பயன் என்ன? அதனை உருவாக்கியவர் யார் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
barcode-example sticker
பார்கோட் - மாதிரி படம்

பார்கோட் என்றால் என்ன?
what is Barcode?


பார்கோட் என்பது பொருட்களைப் பற்றிய தகவல்களை அறிய பயன்படுத்தும் கணினி குறியீட்டை உள்ளடக்கிய டிஜிட்டல் குறியீட்டு (Digital coding) முறையாகும். இதில் உள்ள கோடுகள், இணைக்கோடுகள், இவற்றிக்கிடையேயுள்ள இடைவெளிகள் ஆகியவற்றின் மூலம் பொருட்களைப் பற்றியத் தகவல்களை அறியும்படி உருவாக்கப் படுகிறது. பார்கோடுகள் 1D, 2D முறையில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

பார்கோடில் உள்ள தகவல்களை படித்தறிய உதவும் பொறியியற் கருவிக்கு பார்கோட் ஸ்கேனர் (Bar-code Scanner) என்று பெயர். 

பார்கோட்டை உருவாக்கியவர்கள்: 
(inventor of Bar Code )

நோர்மன் ஜோசப் வூட்லான்ட் அவருடைய நண்பர் பேர்னாட் சில்வர் உதவியுடன் 1940 ஆம் ஆண்டு பார்கோட் முறையை கண்டுபிடித்தார்.  

இந்த முறையானது உலகளவில் வணிக வளாகங்கள், வர்த்தக நிலையங்களில் விற்கப்படும் பொருட்களின் விலை மற்றும் பொருட்கள் தொடர்பான மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள பயன்படுத்தபட்டு வருகின்றது. 

inventor of barcode
பார்கோட் முறையை உருவாக்கியவர் -நேர்மன் ஜோசப் வூட்லான்ட்

தற்காலத்தில் வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் வியாபார துறையில் பார்கோட் முறையானது மிகப்பெரிய பயனுள்ள விடயமாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்தளவிற்கு பார்கோட்டின் பங்களிப்பு வர்த்தகத்தில் அதிகரித்துள்ளது.  

தற்பொழுது பார்கோட் மூலம் நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டின் தயாரிப்பு என்பதை எளிதாக தெரிந்துகொள்ள முடியும். 

ஒவ்வொரு நாட்டிற்கான பார்கோடும் , நாட்டின் பெயரையும் ஒரு பட்டியலிடப்பட்டுள்ளது.

நீங்கள் வாங்கும் பொருட்களில் உள்ள பார்கோட் பட்டையில் உள்ள முதல் மூன்று எழுத்துக்களை வைத்து, அப்பொருள் எந்த நாட்டின் தயாரிப்பு என்பதை கண்டறிய முடியும்.

உதாரணமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களில் உள்ள பார்கோட் 890 எனத் தொடங்கும். இதுபோன்று ஒவ்வொரு நாட்டிற்கான குறியீட்டை தெரிந்து வைத்துக்கொள்வதன் மூலம் அது எந்நாட்டின் தயாரிப்பு என்பதை கண்டறியலாம். 


Barcode
Countries
00-13
 USA & Canada
20-29
 In-Store Functions
30-37
 France
40-44
 Germany
45
 Japan (also 49)
46
 Russian Federation
471
 Taiwan
474
 Estonia
475
 Latvia.
477
 Lithuania
479
 Sri Lanka
480
 Philippines
482
 Ukraine
484
 Moldova
485
 Armenia
486
 Georgia
487
 Kazakhstan
489
 Hong Kong
49
 Japan (JAN-13)
50
 United Kingdom
520
 Greece
528
 Lebanon
529
 Cyprus
531
 Macedonia
535
 Malta
539
 Ireland
54
 Belgium & Luxembourg
560
 Portugal
569
 Iceland
57
 Denmark
590
 Poland
594
 Romania
599
 Hungary
600 & 601
 South Africa
609
 Mauritius
611
 Morocco
613
 Algeria
619
 Tunisia
622
 Egypt
625
 Jordan
626
 Iran
64
 Finland
690-692
 China
70
 Norway
729
 Israel
73
 Sweden
740
 Guatemala
741
 El Salvador
742
 Honduras
743
 Nicaragua
744
 Costa Rica
746
 Dominican Republic
750
 Mexico
759
 Venezuela
76
 Switzerland
770
 Colombia
773
 Uruguay
775
 Peru
777
 Bolivia
779
 Argentina
780
 Chile
784
 Paraguay
785
 Peru
786
 Ecuador
789
 Brazil
80 - 83
 Italy
84
 Spain
850
 Cuba
858
 Slovakia
859
 Czech Republic
860
 Yugoslavia
869
 Turkey
87
 Netherlands
880
 South Korea
885
 Thailand
888
 Singapore
890
 India
893
 Vietnam
899
 Indonesia
90 & 91
 Austria
93
 Australia
94
 New Zealand
955
 Malaysia
977
 International Standard Serial Number for Periodicals (ISSN)
978
 International Standard Book Numbering (ISBN)
979
 International Standard Music Number (ISMN)
980
 Refund receipts
981 & 982
 Common Currency Coupons
99
 Coupons

தற்பொழுது ஆன்லைன் மூலமும் பார்கோட் உருவாக்க முடியும். உதாரணமாக கூகிள் தளத்தில் online barcode என தட்டச்சிட்டு பெறும் முடிவுகளில் கிடைக்கும் தளங்களைப் பயன்படுத்தி உங்களுடைய தகவல்களுக்கான பார்கோட்டினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். 

உதாரணமாக இந்த Barcode Generator Online தளத்தின் மூலம் மிக எளிதாக உங்களுடைய பார்கோட்டை உருவாக்க முடியும். 

பார்கோட் உருவாக்குவதற்கான இலவச மென்பொருள்களும் உண்டு. கூகிள் தேடுதளத்தில் barcode generator software for free எனத் தேடினால் பார்கோட் உருவாக்கப் பயன்படும் மென்பொருள் தரவிறக்குவதற்கான சுட்டிகள் கிடைக்கும். 

பார்கோட் பற்றிய மேலதிக முழுமையான தகவல்களைப் பெற நீங்கள் தமிழ் விக்கிபீடியா தளத்தினை அணுகலாம்.

No comments:

Post a Comment