Monday, July 21, 2014

தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்!!






பொதுவாக நாம் மின்னஞ்சலை திறக்கும் போது பல கடுப்பூட்டும் செய்திகள் வந்துகொண்டே இருக்கும். எப்போதாவது நாம் ஏதாவது ஒரு தளத்தில் எமது மின்னஞ்சலைப் பதிவு செய்திருப்போம்.
அது நம் காலைச் சுற்றிய பாம்பாக எப்போதும் இன்பாக்ஸ்ல் வந்து தொந்தரவு கொடுக்கும். அப்படிப்பட்ட மின்னஞ்சல்களை எப்படி நிறுத்துவது என்பது பற்றிப் பாப்போம்…

Gmail ல் செயற்படுத்த

உங்கள் account உள் செல்லவும்
உங்கள் வலது பக்க மேல் மூலையிலுள்ள setting ஐ select செய்யவும்
Settings க்கு கீழே, Filters என்பதை click செய்யவும்
நீங்கள் இப்போது “Create a new filter“ எனப் படும் option ஐ காண்பீர்கள். அதைக் click செய்யுங்கள்
இப்போது from என இருக்கும் இடத்தில் உங்களுக்கு தேவையில்லாது வரும் மின்னஞ்சல் முகவரியை type செய்யுங்கள்.

உதாரணமாக infoseithy@gmail.com இலிருந்து வரும் மின்னஞ்சல்களை முடக்கவேண்டும் என்றால் infoseithy@gmail.com என டைப் செய்ய வேண்டும். அனைத்து மின்னஞ்சல்களையும் முடக்க இதே போல் செய்யவும்.

இப்போது அடுத்த step ல் Delete it என்பத click செய்வதன் மூலம் e-mail கள் அனைத்தும் trash ற்கு சென்று விடும். அந்த e-mailகளைத்திரும்பப் பெறநீங்கள் செய்யவேண்டியது “filter” என நீங்கள் create செய்ததை delete செய்தால் சரி.

Yahoo வில் செய்ய

உங்கள் கணக்கினுள் உள் நுழையுங்கள்
உங்கள் வலது பக்க மேல் மூலையிலுள்ள option ஐ select செய்யவும்
அதில் More options ஐ select செய்யுங்கள்
வலது பக்கத்திலுள்ளதில் Filters என்பதை select செய்து அதில் create or edit filters என்பதை அழுத்துங்கள்
இப்போது add என்பதை அழுத்துங்கள்
அடுத்ததில் உங்கள் filter க்கு ஒரு பெயரைக் கொடுத்து விட்டு, from என்ற இடத்தில் block செய்ய விரும்பும் மின்னஞ்சல் முகவரியை type செய்யுங்கள்

உதாரணமாக infoseithy@gmail.com இலிருந்து வரும் மின்னஞ்சல்களை முடக்கவேண்டும் என்றால் infoseithy@gmail.com என டைப் செஞ்ச வேண்டும். அனைத்து மின்னஞ்சல்களையும் முடக்க இதே போல் செய்யவும்.

பின்னர் Move the message to : Trash என அழுத்தி save செய்து கொள்ளுங்கள்.

Hotmail

உங்கள் கணக்கினுள் உள் நுழையுங்கள்
உங்கள் வலது பக்க மேல் மூலையிலுள்ள option ஐ select செய்யவும்
அதில் More options ஐ select செய்யுங்கள்
பின்னர் Safe and blocked senders என்பதை அழுத்தி அதன் கீழ் Junk e-mail என்பதை அழுத்துங்கள்
இப்போது Blocked senders என்பதை click செய்யுங்கள்
blocked e-mail address or domain என்ற fieldல் நீங்கள் block செய்ய விரும்பும் மின்னஞ்சல் முகவரியை type செய்து save செய்து கொள்ளுங்கள்.

உதாரணமாக infoseithy@gmail.com இலிருந்து வரும் மின்னஞ்சல்களை முடக்கவேண்டும் என்றால் infoseithy@gmail.com என டைப் செஞ்ச வேண்டும். அனைத்து மின்னஞ்சல்களையும் முடக்க இதே போல் செய்யவும்.

No comments:

Post a Comment