பொதுவாக சிலருக்கு கம்ப்யூட்டரை பற்றிய சில சந்தேகங்கள் நீண்ட நாட்களாக இருந்துகொண்டே இருக்கும் ஆனால் அதை யாரிடம் கேட்டு சரி செய்துகொள்வது என்று தெரியாமல் அதற்க்கு விடை தெரியாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படி சில சந்தேகங்களில் இதுவும் ஒன்று.
அதாவது நம் கம்ப்யூட்டரில் விண்டோ மீடியா பிளேயர் என்று ஒன்று இருப்பது
எல்லோருக்கும் தெரியும். அந்த விண்டோ மீடியா பிளேயரில் நாம் ஒரு ஆடியோ பாடல் கேட்க்க நினைத்தால் கேட்டுவிடலாம் ஒரு சிறிய வீடியோ கிளிப்பை பிளே செய்ய நினைத்தால் பிளே ஆகிவிடும் ஆனால் ஒரு DVD படத்தை நம்மால் அதில் பார்க்க நினைத்தால் பார்க்க முடியாது. நம்முடைய கம்ப்யூட்டரில் DVD படம் போடும் DVD-RW பொருத்தப்பட்டு இருந்தும் நம்மால் இந்த விண்டோ மீடியா பிளேயரில் டிவிடி படத்தை போட்டு பார்க்கமுடியவில்லையே என்று சிலருக்கு வருத்தமாக இருக்கும். இருந்தாலும் என்ன செய்ய வேறு வழி இல்லாமல் மற்ற சில டிவிடி பிளே செய்யக்கூடிய மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து அதன் உதவியோடு டிவிடியை இயக்கி பார்த்துகொள்வார்கள்.
ஆனால் இங்கு நான் கொடுத்திருக்கும் Codec Pack என்ற மென்பொருளை நீங்கள் இன்ஸ்டால் செய்தால் எந்த பிரட்ச்சனையும் இல்லாமல் உங்கள் விண்டோ மீடியா பிளேயரிலேயே நீங்கள் உங்கள் DVD கேசட்டை இயக்கலாம். அதோடு மட்டுமல்ல உங்கள் மொபைல் கிளிப்புகளான .3gp டைப் வீடியோ மற்றும் .avi, .flv, .mkv, .mp4 போன்ற அனைத்துவகையான வீடியோ கிளிப்புகளையும் நீங்கள் விண்டோ மீடியா பிளேயரிலேயே பார்த்துக்கொள்ளலாம்.
இந்த K -lite Mega Codec Pack என்ற மென்பொருளை முதலில் கீழே கொடுத்துள்ள சுட்டியை கிளிக் செய்து டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்.
சுட்டி

பிறகு நீங்கள் டவுண்லோடு செய்து இந்த Codec Pack என்ற ஐக்கானை டபுல்கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய ஆரம்பியுங்கள். இண்டால் ஆரம்பம் செய்ததற்க்கு அடையாளமாக இங்கு கீழே காண்பதுபோன்ற ஒரு தட்டு ஓப்பன் ஆகும். இதில் Next ஐ அழுத்துங்கள்.

அடுத்து இங்கு கீழே காண்பதுபோல் டிக்குகளையும் செய்துகொள்ளுங்கள்...





No comments:
Post a Comment