Tuesday, May 29, 2012

எளிய முறையில் HTML ன் இரகசிய குறிகளை தெரிந்துக் கொள்ளலாம்




வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணணியின் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. கணணி பயன்பாட்டை அனைவரும் கற்றுக்கொள்வது இன்றியமையாததாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக HTML கற்போர் தொகை அதிகமாகவே உள்ளது.
ஏனெனில் HTML பல்வேறு துறைகளில் முக்கியத்துவம் பெற்று வருகின்றது.
குறிப்பாக Blogger போன்ற தளங்களை கையாளுவதற்கு HTML அடிப்படை அறிவு அவசியமாகிறது.
HTML கற்போர் பொதுவாக தங்களது பிரதான HTML Editor ஆக Microsoft இன் Notepad இனையே பயன்படுத்துகின்றனர். ஆனால் Microsoft இன் Notepad இல் பயனாளருக்கு வழங்கப்படும் வசதிகள் Notepad++ உடன் ஒப்பிடுகயில் ஒப்பீட்டளவில் குறைவு என்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில் Notepad இல் HTML Tags எழுதும் போது சில வேளைகளில் HTML Tags ஆரம்பித்தது போல் நிறைவு செய்யப்பட்டிருக்காது. இந்த குறைபாட்டினை நாம் கவனிக்காது File ஐ சேமிக்கும் போது நாம் எதிர்பார்க்கும் பயன்பாட்டை நம்மால் பெறமுடியாது.
ஆனால் இவற்றை சுட்டிக்காட்டும் வசதி Notepad++ இல் உள்ளது. நீங்கள் HTML Tags ஆரம்பித்ததும் Notepad++ இல் ஓர் அடைப்புக்குறி ஆரம்பித்து நீங்கள் HTML Tags ஐ சரியாக நிறைவு செய்த பின்னரே நிறைவு பெறும். இதன் மூலம் நீங்கள் தவறுவிட்ட இடத்தை இலகுவில் அறிந்து கொள்ளலாம்.
மேலும் நீங்கள் குறித்த ஒரு சொல்லைத் தெரிவுசெய்ததும் அதனை ஒத்த சொற்கள் Highlight செய்து காட்டப்படும், அத்துடன் மேம்படுத்தப்பட்ட தேடல் வசதி, Edit செய்யப்படும். செய்யப்பட்ட அனைத்து File களும் தனித்தனி tab களில் காணப்படும் வசதிகள் இதில் காணப்படுவதுடன் PHP, Java, XML, Java Script, VB, C++, C # போன்ற பல தரப்பட்ட File களையும் கையாளும் வசதிகளும் தரப்பட்டுள்ளது.
அத்துடன் இது ஒர் இலவச மென்பொருள் என்பதும் முக்கிய அனுகூலமாகும். நீங்களும் இம் மென்பொருளை தரைவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

No comments:

Post a Comment