Friday, August 24, 2012

Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?


பேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்கும் வரும் பிரச்சினை, சில முக்கியமான தருணங்களில் சாட்க்கு வரும் நண்பர்கள். அதிலும் சில முகம் தெரியாத நண்பர்கள் வந்து அதை பார், இதைப் பார் என்று விளம்பரம் வேறு செய்வார்கள். இதை தவிர்த்து நீங்கள் பேஸ்புக்கில் சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருந்து, மற்றவர்களுக்கு எப்படி offline-இல் இருப்பது என்று
பார்ப்போம்.  
1. பேஸ்புக்கில் நுழைந்த உடன் Chat பகுதிக்கு வரவும். அதில் settings icon >> Advanced Settings என்பதை கிளிக் செய்யவும். 
2.இப்போது கீழே வருத்துவது போல ஒரு விண்டோ வரும், அதில் "Only some friends see you…" என்பதை கிளிக் செய்யவும். அதில் யாருக்கு நீங்கள் ஆன்லைனில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் பெயரை மட்டும் கொடுக்கவும். 
3. இப்போது Save செய்து விடுங்கள். 
வேலை முடிந்தது. இனி அவர்களுக்கு மட்டுமே நீங்கள் ஆன்லைனில் இருப்பீர்கள். யாரையேனும் நீக்க விரும்பினாலும், சேர்க்க விரும்பினாலும் இதே பக்கத்துக்கு வந்து செய்யலாம். 
இதே நிறைய பேருக்கு ஆன்லைனில் இருக்க வேண்டும், அடிக்கடி தொல்லை தரும் நபர்களுக்கு மட்டும் offline-இல் இருக்க விரும்பினால் பேஸ்புக்கில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் Offline ஆவது எப்படி? என்ற பதிவை பார்க்கவும்.

No comments:

Post a Comment