Wednesday, May 16, 2012

ஆங்கில பாடங்களை ஞாபகம் வைக்க புதுமையான வழி

ஆங்கிலப் பாடங்களை ஞாபகம் வைப்பது கொஞ்சம் கடினம் தான்
ஆனால் இனி நீங்கள் ஆங்கில பாடங்களை எளிதாக ஞாபகம்
வைத்துக்கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காகவே ஒரு
இணையதளம் வந்துள்ளது.இதைப்பற்றி தான் இந்த பதிவு.

இணையதள முகவரி :  http://www.memorizenow.com

படம் 1
படம் 2
இந்த இணையதளத்திற்கு நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள சென்று
வேண்டிய பாடத்தை டைப்செய்து கொள்ள வேண்டும்.பாடத்தை
ஒரு பெயர் இட்டு சேமித்துக்கொள்ளவும்.மொத்தமாக
வார்த்தைகள் அல்லது நார்மல் எது வேண்டுமோ அதை தேர்வு
செய்துகொள்ளவும். இதற்கு அடுத்து படம் 1-ல் காட்டியபடி
ADD என்ற பட்டனை அழுத்த வேண்டும்.அடுத்ததாக மெமரைஸ்
என்ற பட்டனை அழுத்தினால் நாம் டைப் செய்த பாடம்
வந்துவிடும் இனி படம் 2 -ல் காட்டியபடி பார்வேடு
அம்புக்குறியை அழுத்தி கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளை
இல்லாமல் செய்து சரியாக ஞாபகம் வைத்திருக்கிறோமா என்று
சரிபார்த்து கொள்ளலாம்.தொடர்ந்து இதே அம்புக்குறியை
அழுத்தி வார்த்தைகளை குறைத்து நாம் ஞாபகம் வைத்திருப்பது
சரிதானா என்று சென்று கொண்டிருக்க வேண்டியது தான்.
இப்படியே கடைசியில் அத்தனை வார்த்தையும் உங்கள்
மூளையில் எளிதாக ஏறிவிடும் உடன் சோதனை செய்து
பார்த்துக் கொள்ளலாம். இப்படியே உங்கள் ஞாபகத்திறமையை
மேலும் அதிகரித்துக்கொள்ளலாம்.ஆங்கிலப் பாடங்களை
ஞாபகம் வைத்துக்கொள்ள கடினமாக உள்ள நம் தமிழ்
மாணவர்களுக்கு இந்த இணையதளம் பெரிதும் உதவும்.

No comments:

Post a Comment