சோசியல் நெட்வொர்க் என்ற சொல்லை கேட்டதும் உடனடியாக நமக்கு தோன்றுவது பேஸ்புக் , டிவிட்டர் தான் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வேர் ஊன்றி வளர்ந்து நிற்கும் சோசியல் நெட்வொர்க் மத்தியல் புதிதாக ஒரு சோசியல் நெட்வொர்க் அக்கம் பக்கத்து வீட்டு நண்பர்களை இணைப்பதற்காக வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
காலையில் 6 மணிக்கு எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை உள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் சோசியல் நெட்வொர்க்-ல் பதிந்து கொண்டு வரும் நண்பர்களுக்கு கூடுதலாக பல சேவைகளை கொண்டு பக்கத்து வீட்டு நண்பர்களை ஒன்றாக சேர்க்க இந்த சோசியல் நெட்வொர்க் உதவுகிறது. இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.இணையதள முகவரி : https://nextdoor.com
அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் மட்டுமே இப்போது பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது வெகு விரைவில் அனைத்து நாடுகளையும் சேர்க்க இருக்கின்றனர். இனி இதன் சேவைப்பற்றி பார்க்கலாம். இத்தளத்திற்கு சென்று நம் இமெயில் முகவரி மற்றும் தெருப்பெயர் மற்றும் City மற்றும் மாநிலம் என்ன என்பதை கொடுத்து Check availability என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழையலாம் ஏற்கனவே நம் அக்கம் பக்கத்து வீட்டினர் Nextdoor -ல் இருக்கின்றனரா என்று பார்த்துக்கொள்ளலாம். நம் பக்கத்து வீட்டு நண்பர்களுக்கும் அழைப்பு அனுப்பி சேர சொல்லலாம் அத்துடன் வழக்கமாக நாம் சோசியல் நெட்வொர்க்-ல் பயன்படுத்தும் அத்தனை சேவைகளையும் இங்கு பயன்படுத்தலாம். பக்கத்து வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்சிகளை உடனடியாக பக்கத்து வீட்டு நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதோடு ஒரு நல்ல நட்பு உருவாக காரணமாக இருக்கும் என்று தெரிகிறது, தெரியாத நபர்களிடம் நம் தகவல்களை பகிர்ந்து கொள்வதை தடுக்கும் வசதியும் இருக்கிறது. புதுமை விரும்பிகளுக்கும் சோசியல் நெட்வொர்க் ரசிகர்களுக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும் இதைப்பற்றிய ஒரு அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9V1tlhGjSMc
No comments:
Post a Comment