Wednesday, May 16, 2012

அழகான பொத்தான் (Button) எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம்.



இணையதளத்திற்கு Button என்ற ஒன்று மிக முக்கியமான ஒன்று அனைவரையும் கவர்ந்து இழுக்கவும், சொல்ல வேண்டிய செய்திகளின் தலைப்பை கொண்டும் நாம் எளிதாக பொத்தான் உருவாக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.நம் இணையதளத்திற்கு என்று நம் விருப்பப்படி ஒரு பொத்தான் (Button) உருவாக்க வேண்டும் என்பவர்கள் இதற்காக புதிதாக எந்த மென்பொருளையும் தேடிச்சென்று படிக்க வேண்டாம் சில நிமிடங்கள்
அழகான பொத்தான் உருவாக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://buttonparty.com/latest
இத்தளத்திற்கு சென்று நாம் Make Your Own Sound Button என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழையவும் அடுத்து வரும் திரையில் Button name என்பதில் என்ன பெயரில் Button இருக்க வேண்டுமோ அந்த பெயரை கொடுக்கவும் அடுத்து Button Color என்று இருப்பதில் எந்த வண்ணத்தில் பொத்தான் இருக்க வேண்டுமோ அந்த வண்ணத்தை தேர்ந்தெடுக்கவும் அடுத்து Button Sound என்பதில் பொத்தானை சொடுக்கினால் ஏதாவது சத்தம் வர வேண்டும் என்றால் அதையும் தேர்ந்தெடுக்கவும் அடுத்து Button Url என்பதில் Button பெயரை ஆங்கிலத்தில் கொடுக்கவும் அடுத்து இருக்கும் Email Address என்பதில் நம் இமெயில் முகவரியை கொடுத்து Create Button என்பதை சொடுக்கினால் போதும் சில நிமிடங்களில் நாம் வடிவமைத்த அழகான பொத்தான் உருவாக்கப்பட்டு நம் இமெயில் கிடைக்கும்.கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment