ஆனால் அதற்குரிய மென்பொருள் நாம் செல்லும் இடம் எல்லாம்
இன்ஸ்டால் செய்ய வேண்டுமே என்று பலர் இன்னும் இந்ததுறையை
இன்னும் தொடமல் இருக்கின்றனர் அவர்களுக்கு ஒரு நற்செய்தி
இனி C , C++ , PHP புரோகிராம் – களை ஆன்லைன் மூலம்
இயக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
சி, சி++ போன்ற மொழி புரோகிராம்களை நாம் ஆன்லைன் மூலம்
எளிதாக இயக்கிப் பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு
இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://codepad.org
தட்டச்சு செய்து Submit என்ற பொத்தானை அழுத்தவும். இதில்
நம் புரோகிராமை இயக்கி வரும் Output ம் சேர்த்தே கொடுக்கிறது
இதன் பின் நாம் புரோகிராமை எடிட் செய்ய வேண்டுமானாலும்
செய்து மறுபடியும் இயக்கிப் பார்க்கலாம். இன்று முன்னனியில்
இருக்கும் C, PHP, Ruby, Python, C++ போன்ற மொழிகளை
நாம் ஆன்லைன் மூலம் இயக்கலாம் எந்த மென்பொருளும்
தேவையில்லை கண்டிப்பாக இந்த செய்தி புரோகிராமருக்கும்,
கணினி மொழி படிக்க விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாக
இருக்கும்.
No comments:
Post a Comment