Sunday, May 13, 2012

அனைத்து சாட்டிலைட் டிவி சேனல்களின் Frequency -ம் ஒரே இடத்தில் நொடியில் அறியலாம்.



தொலைகாட்சி நிகழ்சிகள் பெரும்பாலும் பலதரப்பட்ட மக்களை தன் பக்கம் வைத்திருக்கிறது பல நேரங்களில் நாம் தேடும் சானல்கள் கிடைப்பதில்லை இதற்கான அலைவரிசை எண் என்ற எங்கும் சென்று தேடாமல் ஒரே இடத்தில் உலகின் அனைத்து  முக்கியமான சானல்கள்களின் அலைவரிசை எண்ணை கொடுக்கிறது ஒரு தளம்.சாட்டிலைட் டிஷ் கூடவே சாட்டிலைட் ரிசவரும்
சேர்த்து வாங்கிய பின் எந்தெந்த சேனல்கள் எந்த அலைவரிசையில் தெரிகின்றது என்பதை ஒவ்வொரு தளமாகச் சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில் இருந்து அத்தனை சாட்டிலைட் சானல்களின் அலைவரிசை எண்ணையும் அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://www.lyngsat.com/freetv/India.html
இத்தளத்திற்கு சென்று நாம் எந்த நாட்டில் இருந்து ஒளிபரப்பாகும் சானல் பற்றிய விபரம் வேண்டுமோ அந்த நாட்டை தேர்ந்தெடுத்தால் போதும் அடுத்த சில நொடிகளில் குறிப்பிட்ட நாட்டில் இருந்து ஒளிபரப்பாகும் அத்தனை சானல்களும் அதற்கு உண்டான அலைவரிசை எண்ணுடன் நமக்கு காட்டப்படும் இதிலிருந்து நமக்குத் தேவையான சானல்களின் அலைவரிசை எண்ணை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.இதைத்தவிர குறிப்பிட்ட சாட்டிலைட் -ல் இருந்து ஒளிபரப்பாகும் சானல்களின் விபரங்களும் தெரிந்து கொள்ளலாம். கேபிள் டிவி வைத்து இருக்கும் நண்பர்களுக்கும் டிஷ் வைத்துக்கொண்டு இலவச சானல்களின் அலைவரிசை எண்ணை தேடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment