Monday, March 18, 2013

மின்னஞ்சலுக்குப் புதியவரா! இமெயில் பார்வேர்ட் டிப்ஸ்


நண்பர்களிடமிருந்து நமக்கு வந்த இமெயில் செய்திகளைப் பலமுறை நம்முடைய மற்ற நண்பர்களுக்கு நாம் அனுப்புவோம். ஆங்கிலத்தில் இதனை பார்வேர்ட் (Forward) செய்தல் என்கிறோம். நாம் விரும்பு வதெல்லாம், அந்த செய்தி நம் நண்பர்கள் அனைவருக்கும், அல்லது குறிப்பிட்ட சிலருக்குச் செல்ல வேண்டும் என்பதே. ஆனால், நம்முடைய நல்ல எண்ணத்தில், செய்திகளை அது வந்த நிலையில், அது குப்பையாக இருந்தாலும், அப்படியே அனுப்பிவிடுகிறோம். இது தவறான
செய்கையாகும்.
ஒரு மின்னஞ்சல் செய்தியினை, மற்றவர் களுக்கு பார்வேர்ட் செய்திடும் முன்னர், பல வேலைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த அஞ்சல் செய்தி, நல்ல வடிவத்தில், சிறப்பானதாக அமைந்திடும். என்ன என்ன நடவடிக்கைகளை அப்போது மேற்கொள்ள வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.
1. குறியீடுகளை நீக்குக:

ஒரு செய்தியை பார்வேர்ட் செய்கையில், அதில் எண்ணற்ற > குறியீடுகளைக் காணலாம். ஒரு டெக்ஸ்ட் பார்வேர்ட் செய்யப்படுகிறது என்பதனைக் குறிக்க பல இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள், மாற்றப்படாத நிலையில் இதனைப் பயன்படுத்துகின்றன. இந்த குறியீடு கள் வரிகளின் தொடக்கத்தில் அமைவது, அதில் உள்ள செய்தியின் முக்கியத்துவத்தினைக் குறைப்பதுடன், அழகற்ற, கட்டற்ற முறையில் காணப்படும். எனவே இவற்றை நீக்க வேண்டும். ஒவ்வொரு வரியாக நீக்கலாம். அல்லது என்ற வசதியைப் பயன்படுத்தி மொத்தமாக நீக்கலாம்.
2. பார்மட்டிங் மாற்றுக:
முதல் முறை ஒரு செய்தியை பார்வேர்ட் செய்கையில், பார்மட்டிங் ஓரளவிற்குக் காணும் வகையில் இருக்கும். அடுத்தடுத்து, அந்த செய்தி பார்வேர்ட் செய்யப்படுகையில், பார்மட்டிங் கில் பல வகை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு தோற்றம் மோசமாக இருக்கும். எனவே பார்மட்டிங் கிளியரன்ஸ் மூலம், புதிய தோற்றத்தினை அமைக்கலாம். இதற்கு டெக்ஸ்ட் முழுவதும் தேர்ந்தெடுத்து, பின்னர் Plain Text கிளிக் செய்து அமைக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம், செய்தி முழுவதும் பார்மட்டிங் இல்லாமல், பிளெய்ன் டெக்ஸ்ட்டாக அமைக்கப்படும். ஆனால், இந்த முறையில் செயல்படுகையில், செய்தியில் உள்ள படங்கள் அனைத்தும் நீக்கப்படும். எனவே கவனத்துடன் செயல்பட வேண்டும்.
3. பெயர்களை நீக்குக:
ஒரு செய்தி பார்வேர்ட் செய்யப்படுகையில், அந்த செய்திக்கு முக்கியத்துவம் அளித்துத்தான், அதனை பார்வேர்ட் செய்கிறோம். அனுப்பிய நபர்களுக்கு அல்ல. எனவே, யாரிடமிருந்து யாருக்கு அனுப்பியது போன்ற தகவல்கள் அனைத்தையும் நீக்கிவிடுங்கள்.
4. சப்ஜெக்ட் மாற்றுக:
ஒரு மெயில் பார்வேர்ட் செய்யப்படுகையில், அதன் சப்ஜெக்ட் சொற்கள் முன் FW: என அமைக்கப்படு வதனைப் பார்க்கலாம். இவற்றை நீக்கிவிட்டு, புதிய சப்ஜெக்ட் வரியைக் கூட நீங்கள் அமைக்கலாம்.
5. அனுப்பியவர் அடையாளம் நீக்கல்:
முதன் முதலில் செய்தி அனுப்பியவரின் பெயர், சிக்னேச்சராக இடம் பெற்றிருக்கலாம். அதனை நீக்கிவிட்டு அனுப்புவதே நல்லது. அதே போல, சிலர் அல்லது சில நிறுவனங்கள், செய்தியில் காணப்படும் உண்மைத் தன்மை குறித்து disclaimer என்று சொல்லப்படும் அறிக்கை அளித்திருப்பார்கள். இதனையும் நீக்க வேண்டும்.
மொத்தத்தில் தேவையற்ற குறியீடுகள், முதலில் மற்றும் அடுத்தடுத்து அனுப்பியவரின் பெயர் சார்ந்த குறிப்புகள், செய்திக்குச் சம்பந்தம் இல்லாத தகவல்கள் ஆகியவற்றை நீக்கி ஒரு மின்னஞ்சலை முன்னோக்கி இன்னொருவருக்கு அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment