கணிப்பொறிகள்(Calculators)
கணனிகளுக்கு முற்பட்ட காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.
கணிப்பொறிகளின் அடுத்த தலைமுறையாகத்தான் கணனிகள் கருதப்படுகின்றன. அத்தகைய
கணிப்பொறிகள் இன்று கணனியில் பயன்படுத்தக்கூடிய விதத்தில் மென்பொருளாக
வெளிவருகின்றன. அவ்வாறானதொரு கணிப்பொறி மென்பொருள் Red Crab.

Red Crab எனப்படும் இந்த இலவச மென்பொருளானது விஞ்ஞானரீதியாக பயன்படுத்தக்கூடிய
விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவவேண்டிய(Installation) அவசியம் இல்லை. இந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் வழங்கும் தரவுகளுக்கு ஏற்ற முறையிலே வரைபுகளையும் தயரித்துக்கொள்ளமுடியும். மிகவும் பயனுள்ளதொரு மென்பொருள்.
No comments:
Post a Comment