Monday, June 11, 2012

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான வேதியல் நீட்சி


எனது கடந்த இடுகையான "மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான கணித நீட்சி" ஐ வாசித்த வேதியல் துறையில் பணியிலிருக்கும் நண்பர் ஒருவர், 'கணிதத்திற்கு நீட்சி உள்ளது போல வேதியல் சமன்பாடுகள், வரைபடங்களை கையாள வேறு ஏதேனும் வழியுள்ளதா'   என்ற கேள்வி எழுப்பியிருந்தார். 

உள்ளது என்பதே, பதில்!
வேதியல் சமன்பாடுகள் மற்றும் மூலக்கூறுகளின் வரைபடங்களை சிறந்த முறையில்  மைக்ரோசாப்ட் வேர்டு பயன்பாட்டில் உருவாக்க, வேதியல் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு தீர்வாக, Microsoft’s new Education Labs சமீபத்தில் வெளியிட்டுள்ள Chemistry Add-in for Word 2007 and 2010 (பீட்டா வடிவில்) அமைந்துள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இந்த நீட்சியை தரவிறக்கி நிறுவும்பொழுது, Visual Studio Tools for Office 3.0 ஐ நிறுவ வேண்டும் என்ற செய்தி வரும். இந்த வசனப்பெட்டியில் Yes கொடுத்து நிறுவிக்கொள்ளுங்கள். 

இதை நிறுவிய பிறகு, உங்கள் வேர்டு 2007 ரிப்பன் மெனுவில் புதிதாக Chemistry மெனு தோன்றியிருப்பதை காணலாம். 

      
இந்த நீட்சியை பயன்படுத்தி வேதியல் சமன்பாடுகள், வரைபடங்களை   எளிதாக உருவாக்க இயலும் 

மூலக்கூறு வடிவம். 


இதற்கு மேல் வேதியல் துறையில் எனக்கு அறிவு இல்லாத காரணத்தினால், மேற்கொண்டு விளக்கமாக இந்த இடுகையை தொடர இயலவில்லை.   துறையை சார்ந்தவர்கள் இந்த வசதியை உபயோகித்து பயன் பெறும்படி கேட்டுக்கொள்கிறேன். 




No comments:

Post a Comment