Thursday, June 14, 2012

Hard Disc முழுமையாக பேக்அப் செய்ய - Paragon Backup & Recovery 2012



இயங்கி கொண்டிருக்கும் கணினியில் மீண்டும் இயங்குதளத்தை நிறுவும் போதோ அல்லது கணினி எதாவது கோளாறு செய்தாளோ வன்தட்டில் உள்ள தகவல்களை நாம் பேக்அப் செய்வோம். அவ்வாறு பேக்அப் செய்ய விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி உள்ளது. ஆனால் விண்டோஸ் மூலமாக பேக்அப் செய்து மீண்டும் நிறுவும் போது சில நேரங்களில் பிழைச்செய்தி ஏற்படுகிறது. இதுபோன்ற பிழைகள் ஏதும் இல்லாமல் இலவகுவாக தகவல்களை பேக்அப் செய்து மீண்டும் நிறுவ  Paragon Backup & Recovery 2012 என்ற மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. வன்தட்டில் இருக்கும் தகவல்களை
அப்படியே வேண்டுமெனிலும் பேக்அப் செய்யலாம் இல்லையெனில் வேண்டிய பகுதியை மட்டும் தேர்வு செய்து பேக்அப் செய்து கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க  சுட்டி

இணையத்தில் இருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவ தொடங்கவும், product key மற்றும் serial number கேட்டும். உடனே Registration என்னும் பொத்தானை அழுத்தவும். இந்த மென்பொருளை நிறுவும் போது உங்கள் கணினியில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் உங்களுடைய சுய தகவல்களை உள்ளிடவும். இதில் முக்கியமானது உங்களுடைய மின்னஞ்சல் முகவரி ஆகும். அதை கவனமாக உள்ளிடவும்.

செக்பாக்சில் டிக் செய்துவிட்டு SUBMIT பொத்தானை அழுத்தி உறுதி செய்து கொள்ளவும். சில விநாடிகளில் நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு  product key மற்றும் serial number அனுப்பபடும். அதனை குறித்து வைத்துக்கொண்டு மென்பொருளை முழுமையாக நிறுவவும்.

பின் ஒருமுறை கணினியை Restart செய்துவிட்டு, Paragon Backup & Recovery 2012 மென்பொருளை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில்  Backup & Recovery என்னும் டேப்பினை தேர்வு செய்து, Backup பட்டியை சொடுகவும்.

பின் உங்கள் விருப்பபடி குறிப்பிட்ட ட்ரைவினை தேர்வு செய்தும் பேக்அப் எடுக்கலாம் அல்லது முழு வன்தட்டினையும் பேக்அப் செய்துகொள்ளவும் முடியும். அடுத்து நீங்கள் பேக்அப் செய்யும் தகவல்களை எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தெரிவு செய்து விட்டு Next பொத்தானை அழுத்தவும். பேக்அப் செய்யும் தகவலுடைய அளவிற்கேற்ப பேக்அப் செய்ய நேரம் எடுத்துக்கொள்ளும். வன்தட்டிலேயே வேண்டுமெனில் பேக்அப் செய்துகொள்ள்லாம் இல்லையெனில் சீடி/டிவிடி க்களிலும் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.  அதேபோல் பேக்அப் செய்த தகவல்களை மீண்டும் Restore பட்டியினை அழுத்தி மீண்டும் நிறுவிக்கொள்ள முடியும். இந்த மென்பொருளை பயன்படுத்தும் போது தகவல் இழப்பு ஏதும் ஏற்படாது. இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.

No comments:

Post a Comment