Wednesday, June 13, 2012

Eraser



நாம் கணினியில் ஒரு கோப்பை அழிக்கிறோம், அதை Recycle bin லிருந்தும் நீக்கி விடுகிறோம்.  அந்த கோப்பு உண்மையில் உங்கள் கணினியிலிருந்து நீக்கப் பட்டு விட்டதா? 

இல்லை என்பதே பதில்! File system Table லில் இருந்து அந்த கோப்பின் reference மட்டுமே நீக்கப் பட்டுள்ளது. அந்த கோப்பு குறிப்பிட்ட ட்ரைவில் எழுதப்பட்டுள்ள இடத்தில் மறுபடியும் ஏதாவது கோப்பு விவரங்கள் மாற்றி மாற்றி எழுதப்பட்டால் மட்டுமே அந்த கோப்பு உண்மையிலேயே நீக்கப்
பட்டுள்ளதாக கருதமுடியும். ஃபோர்மெட் செய்யும் பொழுதும் இதே கதைதான்.

உங்கள் பழைய கணினியை யாருக்காவது விற்கிறீர்கள் அல்லது கொடுக்கிறீர்கள், அல்லது உங்கள் மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுக்கிறீர்கள், இப்படி கோப்புகள் அழித்ததாக நீங்கள் நினைத்திருக்கும் ட்ரைவிலிருந்து, ஒரு சில மென்பொருட்களைக் கொண்டு எளிதாக திரும்ப எடுத்து விட முடியும். 
அப்படியெனில் கணினியில் ஒரு ட்ரைவில் உள்ள தகவல்களை நிரந்தரமாக அழிப்பது எப்படி? ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது, Eraser எனும் சுதந்திர இலவச மென்பொருள். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).

உங்கள் கணினியில் உள்ள ட்ரைவில் தகவல்களை நிரந்தரமாக அழிப்பதற்க்கான மென்பொருள் இது என்பதால், மிகவும் கவனமாக கையாளவும். 

No comments:

Post a Comment