Wednesday, June 20, 2012

ஜிமெயிலில் பயனுள்ள புதிய வசதி - Smart Labels



தற்போது கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதில் குறிப்பாக செய்தி பரிமாற்றத்திற்கு மெயில்களை பயன்படுத்துவது அதிகரித்து கொண்டே போகிறது. கூகுள் வழங்கும் மெயில் நிறுவனமான ஜிமெயிலை பெரும்பாலனாவர்கள் உபயோகித்து கொண்டு இருக்கிறோம். இதில் நமக்கு வரும் மெயில்களை தனி தனியாக பிரித்து அறிந்து கொள்ள லேபில் வசதியை பயன்படுத்துகிறோம். இருந்தும் பல லேபில்கள்
உருவாக்குவதால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள சிரமம் உள்ளது. 

  • இந்த பிரச்சினையை தீர்க்க ஜிமெயிலில் ஒரு புதிய வசதி வந்துள்ளது. நீங்கள் குறிப்பிட்ட லேபிளுக்கு குறிப்பிட்ட நிறத்தை தேர்வு செய்து விடலாம்.  
  • தேர்வு செய்து விட்டால் ஒவ்வொரு லேபிளில் வரும் ஈமெயிலும் அதற்கென தனி நிறத்தில் காட்சி அளிக்கும்.
  • உங்கள் ஜிமெயில் லேபில் பகுதியில் ஒரு சிறிய கட்டம் போன்ற பகுதி தெரியும். அதில் க்ளிக் செய்தால் கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும். 
  • அந்த விண்டோவில் உங்களுக்கு தேவையான நிறத்தை தேர்வு செய்து கொள்ளவும். அதில் உள்ள நிறங்கள் பிடிக்கவில்லை என்றால் Add Custom Color என்பதை க்ளிக் செய்து தேவையான நிறத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

  • இப்படி ஒவ்வொரு லேபிளுக்கும் ஒவ்வொரு நிறத்தையும் தேர்வு செய்து விடவும்.
  • இப்பொழுது உங்களுக்கு வரும் மெயில்கள் அந்தந்த லேபில்களின் நிறங்களில் காணப்படும். 
  • இனி நிறங்களை வைத்தே உங்களின் மெயில் வகையை எளிதாக கண்டறியலாம். 

No comments:

Post a Comment