Monday, June 11, 2012

ஷார்ட்கட் ட்ரிக்ஸ்


வழக்கமாக நாம் விண்டோஸ் இயங்குதளத்தில் ஏதாவது ஒரு ஃபோல்டர் அல்லது கோப்பிற்கு ஷார்ட்கட் உருவாக்கும் பொழுது,

உருவாக்கப்படும் ஷார்ட்கட் இன் பெயர் Shortcut to + அந்த கோப்பின் பெயர் ஆக
உருவாகுவதை கவனித்திருப்பீர்கள். உதாரணமாக Test என்ற ஃபோல்டரின் shortcut, Shortcut to Test என உருவாக்கப்படும். 


இது போல விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் Test - shortcut என உருவாக்கப்படும். இப்படி Shortcut to அல்லது Shortcut என பெயரோடு சேர்க்கப் படுவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? உதாரணமாக Test என்ற ஃபோல்டருக்கான  shortcut -இன் பெயரும் Test என்றே இருக்க வேண்டும். (அப்படின்னா இரண்டுக்கும் எப்படி வித்தியாசம் தெரியும் என கேட்பவர்களுக்கு - அதான் இடது புற ஓரத்தில் சின்ன அம்புக்குறி வருமே... )

விண்டோஸ் start மெனுவில் Run (விஸ்டா மற்றும் 7 -இல் search box ) சென்று Regedit என டைப் செய்து Registry editor ஐ திறந்துக் கொள்ளுங்கள். அங்கு கீழே தரப்பட்டுள்ள பகுதிக்கு செல்லுங்கள். 

HKEY_CURRENT_USER
Software
Microsoft
Windows
CurrentVersion
Explorer
இடது புற பேனில் Explorer ஐ க்ளிக் செய்த பிறகு, வலது புற பேனில், Link என்ற key ஐ இரட்டை க்ளிக் செய்து,   அங்கு அதன் மதிப்பு  1b 00 00 00 (Windows xp) 1e 00 00 00 (Windows 7 / Vista) என்று இருப்பதை முதல் இரண்டு இலக்கங்களையும் 00 என மாற்றி விடுங்கள். அதாவது 00 00 00 00.

இதற்கு மேல் ஒரு முறை Log off அல்லது Restart செய்த பிறகு நீங்கள் உருவாக்கும் ஷார்ட்கட் , அந்த கோப்பின் பெயரிலேயே இருக்கும்.


மறுபடியும் இதை மாற்ற இதே வழியை பின்பற்றி மேலே சொன்ன மதிப்பை பழையபடி மாற்றிக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment