வழக்கமாக நாம் மின்னஞ்சல்களில் ஏதாவது கோப்புகளை இணைக்க முற்படும்பொழுது, நமக்கு வரும் பெரிய பிரச்சனை என்னவென்றால், நமக்கு வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் வசதிகளில் 5 முதல் 10 MB வரையிலான அளவுள்ள கோப்புகளை மட்டுமே இணைக்க முடியும். ஆனால் நாம் இணைக்க விரும்பும் கோப்பு 10 MB க்கு மேற்பட்டதாயிருந்தால் என்ன செய்யலாம். நீங்கள் Outlook உபயோகிப்பவராக இருந்தால் Drop.oi எனும் ஓர் இலவச (100 MB க்கு மேல் என்றால் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்) நீட்சி! (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).
இந்த நீட்சியை தரவிறக்கி பதியும் பொழுது Outlook ஐ திறக்க வேண்டாம். பதிந்து கொண்டபிறகு, Outlook ஐ திறந்தால் அதில் புதியதாக ஒரு டூல்பார் வந்திருப்பதை கவனிக்கலாம்.
இதனை உபயோகித்து 100 MB வரையிலான கோப்புகளை எளிதாக மின்னஞ்சலில் இணைக்க முடியும்.
No comments:
Post a Comment