இன்றை நவீன உலகில் கிராபிக்ஸ் என்பது கொடிகட்டிப் பறக்கும் ஒரு துறையாகும். இதனூடாக பல வியக்கவைக்கும் புதுமைகளை படைக்கமுடியும்.
இதனால் கிராபிக்ஸ் செய்வதற்காக பல்வேறு வகையான மென்பொருட்கள் கிடைக்கின்றன. உதாரணமாக அநேக நபரால் அறியப்பட்ட போட்டோசொப் மென்பொருளை குறிப்பிடலாம்.
அதேபோல போட்டோக்களின் வெற்றிடமாக காணப்படும் background பகுதியை இலகுவாகவும், மேலதிகமாகவும் சேர்ப்பதற்கு AntiCrop எனும் புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒரே மாதிரியான பின்னணிகளை ஒன்றிணைக்க முடியும். அதாவது புல்வெளி, ஆகாயம், மணல், நீர் போன்ற பின்னணிகளை கொண்ட நீங்கள் விரும்பிய போட்டோவில் அதே பின்னணி மேலும் வெற்றிடமாக உள்ள பரப்பில் சேர்க்கவிரும்பின் இம்மென்பொருளை பயன்படுத்தமுடியும்.
எனினும் இம்மென்பொருளானது இறுதியாக வெளியிடப்பட்ட அப்பிள் போன்களிலும், iTunes களிலும் மட்டமே பயன்படுத்தமுடியும்.
No comments:
Post a Comment