அலுவலகத்தில் எவ்வளவு நேரம்தான் கணினியின் முன்னால், சீரியஸாக வேலை செய்வது போல பாவ்லா காண்பித்துக் கொண்டிருக்க முடியும், என்று யோசிப்பவர்களுக்கு.. (இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.. )
Double Vision - Online media browser எனும் எளிய மென்பொருள். தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் கணினி அப்ளிகேஷனில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது, யூ டியுப் போன்ற தளங்களில் படம் பார்க்கவும், இணையத்தில் உலாவவும் முடியும், இது உங்கள் அப்ளிகேஷன் மீது transparent ஆக செயல் படுவதால் உங்கள் பணியும் நடந்தது போல இருக்கும், படம் பார்த்தது போலவும் இருக்கும்.
நீங்கள் பணி புரிந்துக் கொண்டிருக்கும் பொழுது (யூ டுயுபில் படம் பார்ப்பது) உங்கள் பாஸ் வந்து விட்டால் Ctrl+Esc அழுத்தி இதனை hide செய்து விடலாம்.
Background -இல் உங்கள் பணியும் நடந்துக் கொண்டிருக்கும்.
மேலும் இதன் settings பகுதிக்குச் சென்று transparent அளவு மற்றும் mute போன்ற மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
ஆணி பிடுங்குறமாதிரி, பிடுங்காமல் இருக்க நினைக்கும் நண்பர்களுக்கு இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment