Monday, June 4, 2012

கோப்புகளை டெலிட் செய்யும் முன் உங்களிடம் அனுமதி பெறுவதற்கு




நம் கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை அழிக்கும் போது தவறுதலாக நமக்கு தேவையான கோப்புக்களையும் அழிக்க நேரிடலாம்.
இதனால் நாம் ஒவ்வொரு முறையும் டெலிட் செய்யும் போது நம்மிடம் அனுமதி பெற்று டெலிட் செய்தால் நன்றாக இருக்கும். வழக்கமாக இந்த செட்டிங் கணணியில் இருக்கும்.
தவறுதலாக இந்த செட்டிங் மாறிவிட்டால் நாம் கோப்புகளை டெலிட்
செய்யும் சமயம் நம்மிடம் அனுமதி கேட்காமலேயே கோப்புகள் ரீ-சைக்கிள் பின்னுக்கு சென்றுவிடும்.
இதனை தவிர்க்க ஒவ்வொரு முறையும் நாம் டெலிட் செய்கையில் நம்மிடம் அனுமதி கேட்டு டெலிட் ஆவது போல் செட் செய்யலாம். அதற்கு நீங்கள் ரீ-சைக்கிள் பின்னை ரைட் கிளிக் செய்து ப்ராபர்டீஸ் தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Global என்பதனை தேர்வு செய்யுங்கள். வரும் விண்டோவில் Display delete confirmation dialog என்பதின் எதிரில் உள்ள கட்டத்தில் டிக் செய்து பின்னர் Apply -Ok செய்யுங்கள்.
பின்னர் ஏதாவது ஒரு கோப்பை டெலிட் செய்யும் போது உங்களிடம் அனுமதி பெற்ற பின்னரே டெலிட் செய்யப்படும்.

No comments:

Post a Comment