Monday, June 11, 2012

வீடியோவை வால் பேப்பராக அமைக்க


நகராத படத்தை வால்பேப்பராக வைத்து போரடித்துப் போனவர்களுக்கு, தங்களுக்கு பிரியமான வீடியோவை கணினியின் வால்பேப்பராக பிரபலமான VLC Media Player ஐ பயன்படுத்தி அமைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். 

VLC மீடியா ப்ளேயரில் Tools மெனுவிற்கு சென்று Preferences பகுதிக்கு செல்லுங்கள். 

இப்பொழுது திறக்கும் Preferences விண்டோவில் இட்டு புற பேனில் உள்ள Video பட்டனை அழுத்தவும்.


இப்பொழுது Video settings பகுதியில் Output என்பதற்கு நேராக DirectX Video output என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். பிறகு Save செய்து விட்டு VLC ஐ Close செய்து மறுபடி திறக்கவும்.

இனி உங்களுக்கு தேவையான வீடியோவை VLC ப்ளேயரில் திறந்து ப்ளே செய்யும் பொழுது, திரையில் வலது க்ளிக் செய்து Context menu வில் Video, மற்றும் DirectX Wallpaper ஐ க்ளிக் செய்யுங்கள். 


Wall paper தோன்றியவுடன் VLC ப்ளேயரை minimize செய்து விடுங்கள். 

அவ்வளவுதான். இனி நீங்கள் விரும்பிய வீடியோ உங்கள் வால் பேப்பராக  உங்கள் கணினியில்..


No comments:

Post a Comment