Friday, June 8, 2012

உங்கள் Hotmail கணக்கை Gmail லில் உபயோகிக்க


உங்கள் Hotmail கணக்கை Gmail லில் உபயோகிக்க முடியுமா?

முடியும்!
ஜிமெயிலிலிருந்து  உங்கள் ஹாட்மெயில் கணக்கில் உள்ள மின்னஞ்சல்களை படிக்கவும், அதேசமயம் ஜிமெயிலில் இருந்த படியே ஹாட் மெயில் கணக்கில் மின்னஞ்சல்களை அனுப்பவும் முடியும்! எப்படி என்பதைப் பார்க்கலாம்.

முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேல்புறமுள்ள Settings லிங்கை க்ளிக் செய்யுங்கள். இங்கு Accounts and Import என்ற பகுதிக்கு செல்லுங்கள்.


இந்த பக்கத்தில் கீழே உள்ள  Check mail using POP3:  என்பதற்கு நேராக உள்ள Add POP3 email account என்ற பொத்தானை அழுத்துங்கள்.


அடுத்து திறக்கும்  Add a mail account you own என்ற விண்டோவில் Email address என்ற டெக்ஸ்ட் பாக்ஸில் உங்களுடைய ஹாட்மெயில் விலாசத்தை கொடுத்து Next Step பொத்தானை அழுத்துங்கள்.

அடுத்தப் பக்கத்தில் உங்களுடைய windows Live கணக்கினுடைய பயனர் பெயர் மற்றும் கடவு சொல்லை கொடுத்து, கீழே உள்ள settings அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப் படுத்தி (குறிப்பாக நீங்கள் ஜிமெயிலில் படித்த ஹாட்மெயில் மின்னஞ்சலை, ஹாட் மெயிலில் விட்டு வைக்க வேண்டுமா? என்பதற்கு "Leave a copy of retrieved messages on the server"    என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.) பிறகு Add Account பொத்தானை அழுத்துங்கள். 

    POP Server: pop3.live.com
    Port: 995
    Always use a secure connection (SSL) when retrieving mail
அடுத்த திரையில் Yes, I want to be able to send mail as… என்பதை தேர்வு செய்து Next Step க்ளிக் செய்யுங்கள்.

இறுதியாக ஜிமெயிலிருந்து உங்கள் ஹாட் மெயில் கணக்கிற்கு ஒரு வெரிபிகேஷன் மெயில் வரும் அதனை டெக்ஸ்ட் பாக்ஸில் டைப் செய்து Verify பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

அவ்வளவுதான்.. இனி உங்கள் ஹாட்மெயில் கணக்கிலுள்ள மின்னஞ்சல்களை ஜிமெயிலில் பார்க்கலாம். அதோடு மட்டுமல்லாமல். ஜிமெயில் Compose திரையில் From க்கு நேராக உள்ள ட்ராப் டவுன் லிஸ்டில் ஹாட்மெயில் கணக்கை தேர்வு செய்து, ஜிமெயிலில் இருந்தபடியே, ஹாட்மெயிலில் மின்னஞ்சல்  செய்யலாம்.

No comments:

Post a Comment