PDF என்றவுடன் உடனே நம் மனம் உச்சரிப்பது Adobe Acrobat. PDF கோப்புகளை படிப்பதற்கு Adobe Reader உட்பட பல மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் ஒரு PDF கோப்பை உருவாக்க, ஸ்ப்ளிட் அல்லது மெர்ஜ் செய்ய, எடிட் செய்ய Adobe Acrobat Professional போன்ற மென்பொருட்களை பணம் செலவழித்து வாங்க வேண்டியுள்ளது.
இந்த பணியினை எளிதாக செய்ய ஒரு கட்டற்ற சுதந்திர இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள் PDFsam (sam= Split and Merge). தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.
இந்த மென்பொருளை உருவாக்கியவர் Andrea Vacondio. இவர் பல வருடங்களுக்கு முன்பாக தனது இளநிலை பட்டப்படிப்பின் போது சமர்ப்பிக்க வேண்டிய தீசிஸ் உருவாக்கத்தின் போது, PDF கோப்பில் சில பகுதிகளை நீக்கவும், இணைக்கவும் அவசிமிருந்ததால், இதற்கான இலவச மென்பொருளை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், இந்த எளிய மென்பொருள் கருவியை உருவாக்கும் எண்ணம் இவருக்கு தோன்றி தனது வார இறுதி விடுமுறை நாட்களில் இதனை உருவாக்கும் பணியில் இறங்கி விட்டார்.
ஆரம்ப காலங்களில் Split and Merge இற்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட மென்பொருள் உருவாக்கம், பின்னர் விரிவடைந்து, split, merge, decrypt, encrypt, rotate, mix, set metadata, visually compose மேலும் பல வசதிகளை கொண்ட மென்பொருள் கருவியாக உருவெடுத்தற்கு காரணமாக இவர் சொல்லுவது, தினமும் காலையில் இவருடைய இணைய Forum த்தில் ‘Hey man, you saved my job yesterday with your software, thanks!’ போன்ற போஸ்டுகள் தான்.
இதனை உருவாக்க இவர் பயன்படுத்தியவை Ubuntu, Eclipse, Ant போன்ற இலவச மென்பொருட்களையே.
மிகவும் பயனுள்ள மென்பொருள் தரவிறக்கி பயன்படுத்திப் பாருங்கள்.
No comments:
Post a Comment