Monday, June 4, 2012

Windows Media Player 12ல் மறைந்துள்ள Equalizerஐ தோற்றுவிப்​பதற்கு




கணணியை பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் விண்டோஸ் மீடியா பிளேயர் பற்றி தெரிந்திருக்கும்.
இது மைக்ரோ சொப்டின் விண்டோஸ் இயங்குதளத்தில் அமைந்திருக்கும் ஒரு மீடியா பிளேயர் ஆகும். இதன் புதிய பதிப்பான விண்டோஸ் மீடியா பிளேயர் 12ன் பீட்டா பதிப்பு அறிமுகமாகியுள்ளது.
இப்பதிப்பில் சில சந்தர்ப்பங்களில் Equalizer ஆனது மறைந்த நிலையில்
காணப்படுகின்றது. எனவே இதனை தோற்றுவிப்பதற்கு பின்வரும் முறைகளை கையாள வேண்டும்.
1. விண்டோஸ் மீடியா பிளேயர் 12ஐ ஓப்பின் செய்து View என்பதற்கு செல்லவும்.
2. தோன்றும் மெனுவில் காணப்படும்  Skin Chooser என்பதை தெரிவு செய்யவும்.
3. தோன்றும் விண்டோவில் Revert என்பதை தெரிவு செய்து Apply பட்டனை அழுத்தவும்.
4. தற்போது விண்டோஸ் மீடியா பிளேயரின் வலது பக்க கீழ் மூலையில் Graphic Equalizer என்ற பட்டின் காணப்படும். அதனை அழுத்தவும்.
5. அழுத்தியதும் Equalizer விண்டோ தோன்றும். இப்போது உங்களுக்கு விருப்பமான Equalizer தெரிவு செய்து கொள்ளவும்.

No comments:

Post a Comment