ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை தனது பணி நிமித்தமாக அத்தியாவசியமாக பயன் படுத்தி வரும் நண்பர் ஒருவர் இன்று காலை தொலைபேசியில் அழைத்து மிகவும் அவசரமாய், அவசியமாய் ஓரு உதவி கேட்டிருந்தார்.
.
அந்த நண்பர் வழக்கமாக காலையில் அலுவலகத்திற்கு வந்து கணினியில் ஜிமெயில் கணக்கில் நுழைந்தவுடன் முதலில் இன்பாக்ஸ் இல்
மின்னஞ்சல்களை திறக்காமலேயே, தேவையற்ற மின்னஞ்சல்களை வரிசையாக தேர்வு செய்து டெலிட் செய்துவிடுவது வழக்கம். இன்றும் வழக்கம் போல அவருக்கு தேவையற்ற நியூஸ் லெட்டர் போன்ற மின்னஞ்சல்களை தேர்வு செய்து டெலிட் செய்யும் பொழுது, தவறுதலாக மிக முக்கியமான மேலதிகாரியிடமிருந்து வந்திருந்த மின்னஞ்சலையும் சேர்த்து டெலிட் செய்து விட்டார்.

அதற்கு முன்பாக அவரது மேலதிகாரி தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டு மின்னஞ்சலை படித்தீர்களா? பதில் வரலையே, என கேட்டிருந்த போது, மின்னஞ்சலை படித்து விட்டேன்.. இன்னும் சிறிது நேரத்தில் பதில் அனுப்புகிறேன், என்று வேறு அளந்து விட்டார்.
இப்பொழுது மின்னஞ்சலை டெலிட் செய்துவிட்ட நிலையில் 'அடடா!.. வடை போச்சே!.. ' என தலையில் கை வைத்தபடி என்னை தொடர்பு கொண்டார்.
'இன்பாக்ஸ் ஃபோல்டரிலிருந்து டெலிட் செய்திருந்தால் அந்த மெயில் ட்ராஷ் ஃபோல்டரில் இருக்கும்.. போய் பாருங்கள்' என்றேன்.
'ட்ராஷ் ஃபோல்டர் ஜிமெயிலில் எங்கேயும் காணோமே! .. இப்ப என்ன செய்றது'
அவருக்கு ஏற்பட்டது போல உங்களுக்கும் நேர்ந்தால்?..
உங்கள் ஜிமெயில் பயனர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு ஜிமெயில் திரையின் வலது மேல் மூலையில் உள்ள Settings லிங்கை சொடுக்குங்கள்.
இனி வரும் திரையில் Labels லிங்கை க்ளிக் செய்யுங்கள். இங்கு பட்டியலிடப் பட்டிருக்கும் Inbox, Buzz, Draft போன்ற ஃபோல்டருக்கு கீழே உள்ள Trash ஃபோல்டருக்கு நேராக உள்ள Show என்ற லிங்கை ஒருமுறை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான்! .. இனி ட்ராஷ் ஃபோல்டரும் உங்கள் ஜிமெயில் திரையில் இடது புற பேனில் தோன்றிவிடும். அங்கு சென்று டெலிட் செய்த மின்னஞ்சல்களை பார்த்துக் கொள்வதோடு, அதனை தேர்வு செய்து Move to பொத்தானை க்ளிக் செய்து மீண்டும் Inbox ஃபோல்டருக்கு மாற்றிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment