Saturday, June 9, 2012

பல மின்னஞ்சல் கணக்குகளை ஒரே சமயத்தில் கையாளுவதற்கான நீட்சி!



ஒரு சிலர் ஜிமெயில், யாஹூ, ஹொட்மெயில் என பல மின்னஞ்சல் கணக்குகளை உபயோகித்து வருகின்றனர். இவற்றை ஒவ்வொரு முறையும் வேறு வேறு டேப்களில் திறந்து பணிபுரிவது சிரமமான காரியமாகும். இணையத்தில் நாம் வேறு முக்கியமான பணியில் இருக்கும் பொழுது, ஏதாவது மின்னஞ்சல் கணக்குகளில் புதிய மின்னஞ்சல் வரும்பொழுது பாப்அப்  அலர்ட் வந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என யோசிப்பவர்களுக்கு, நெருப்பு நரிஉலாவிக்கான   WebMail Notifier நீட்சி!



தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. இதனை பதிந்து கொண்ட பிறகு நெருப்பு நரி உலாவியை ரீஸ்டார்ட் செய்த பின்னர்


WebMail Notifier நீட்சியில் Options சென்று Webmail Accounts டேபில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, கடவு சொல் ஆகியவற்றை கொடுத்து Add செய்து கொள்ளவும்.


மேலும் தேவையான மாற்றங்களை செய்து OK கொடுத்து சேமித்து கொள்ளவும். இனி இந்த WebMail Notifier  உங்கள் நெருப்பு நரி உலாவியின் வலது கீழ் மூலையில் அமைதியாக காத்திருக்கும் பல்வேறு கணக்குகளில் இருந்து உங்களுக்கு வரப்போகின்ற புதிய மின்னஞ்சலுக்காக..




No comments:

Post a Comment