ஜிமெயில் பயனாளர்கள் சிலருக்கு தங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை மற்றொரு மின்னஞ்சல் முகவரிக்கு ஆட்டோமெடிக்காக ஃபார்வேர்டு செய்ய வேண்டிய தேவை இருக்கலாம். இதனை எளிதாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது
மேற்புறமுள்ள Settings லிங்கை க்ளிக் செய்து Settings பக்கத்தை திறந்து கொள்ளுங்கள்.
மேற்புறமுள்ள Settings லிங்கை க்ளிக் செய்து Settings பக்கத்தை திறந்து கொள்ளுங்கள்.
இதில் Forwarding and POP/IMAP எனும் லிங்கை கிளிக் செய்யுங்கள்.
இந்த பக்கத்தில் முதலாவதாக உள்ள Forwarding பகுதியில் Forward a copy of incoming mail to என்பதற்கு நேராக உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்து, email address என்ற பகுதியில் எந்த மின்னஞ்சல் முகவரிக்கு ஃபார்வேர்டு செய்ய வேண்டுமோ அந்த முகவரியை டைப் செய்யவும்.
அவ்வளவுதான், இனி அப்படி ஃபார்வேர்டு செய்த மின்னஞ்சல்களை ஃபார்வேர்டு செய்த பிறகு என்ன செய்வது எனபதையும் தேர்வு செய்து கொள்ளலாம் என்பது இதனுடைய சிறப்பம்சம்.
No comments:
Post a Comment