ஜிமெயில் பயனாளர்கள் பலர் ஒரு கணினியில் மட்டுமல்லாது பல கணினிகளில் ஜிமெயிலில் பணி புரிகிறார்கள். உதாரணமாக Browsing Centre,அலுவலக கணினி, வீட்டிலுள்ள கணினி, நண்பர்கள் அல்லது உறவினர்களின் கணினி போன்றவற்றில் மின்னஞ்சல் பணிகளை முடித்த பிறகு ஞாபகமறதியால் Sign out செய்யாமல் வந்து விடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். மொத்தமாக நாம் பணி செய்த அனைத்து கணினிகளிலிருந்தும் ஒரே நேரத்தில் sign out செய்ய இயலுமா?
மேலும் நமது மின்னஞ்சல் கணக்கில் வேறு யாராவது விளையாடுகிறார்களா? என்பதையும் நாம் அறிந்து கொள்ள ஜிமெயிலில் வசதி தரப்பட்டுள்ளது.
உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள். Inbox இன் கீழே உள்ள Last account activity என்பதற்கு நேராக உள்ள Details என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.
இனி திறக்கும் Activity Information விண்டோவில் உங்களது கடைசி ஐந்து லாகின் விவரங்கள் தரப்பட்டிருக்கும். இதிலிருந்து உங்கள் ஜிமெயில் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்ய இயலும்.
மேலும் இதிலுள்ள Sign out all other sessions என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக மாற்ற கணினிகளிலிருந்து ஒரே சமயத்தில் Sign out செய்து விட முடியும்.
No comments:
Post a Comment