Tuesday, December 31, 2013

நீங்கள் கூகிள் குரோம் யூஸ் பன்றீங்களா? எச்சரிக்கை..!


இணையத்தைப் பயன்படுத்தும் பெரும்பானாவர்கள் கூகிள் குரோம் பிரௌசரையே பயன்படுத்துகிறார்கள். காரணம் தற்போதுள்ள பிரௌசர்களில் அதிக வேகத்துடன் செயல்படக்கூடிய பிரவுசர்  (Fast browser google chrome) அதுதான்.

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த் கூகிள் குரோம் பிரௌசரையும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.  (New updated technology browser) தனிப்பட்ட முறையில் கணினி மற்றும் இணைய இணைப்பு வைத்திருந்தால் அதிக தொல்லைகள் இல்லை.

அதுவே நீங்கள் இன்டர்நெட் சென்டர்களில் போய் இணையத்தைப் பயன்படுத்துபவர் என்றால் கட்டாயம் கவனமாகதான் இருக்க வேண்டும்.



பிரௌசரில் நீங்கள் உள்ளிடும் பாஸ்வேர்ட்களை சேமிக்கவென ஒரு வசதி உள்ளது. இன்டர்நெட் சென்டரில் சென்று நீங்கள் உங்கள் முக்கியமான மின்னஞ்சல் முகவரியின் பாஸ்வேர்டை உள்ளிட்டு, மின்னஞ்சலை பயன்படுத்திவிட்டு லாக் அவுட் செய்து வந்துவிடுவீர்கள்.

ஆனால் உங்களுனைய மின்னஞ்சலும் , அதற்குரிய பாஸ்வேர்ட்டும் குரோம் பிரௌசரில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கும் (Email password protections).

வேறொரு நபர் அதைப் பயன்படுத்தும்போது உங்களுடைய மின்னஞ்சலை திறந்து பார்ப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அவ்வாறு அவர்கள் உங்கள் மின்னஞ்சலை உங்கள் நண்பர்களுக்கோ அல்லது வேறொரு நபருக்கோ தவறாக மின்னஞ்சல் அனுப்ப முடியும். (protect your password from others)

இதைத் தவிர்க்க,

  •  கூகுள் குரோம் பிரோசரில் உள்ள settings bar கிளிக் செய்து செட்டிங்ஸ் செல்லவும். 
  • அந்தப் பக்கத்தின் இறுதியில் Show Advanced Settings  என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • அங்கு Privacy என்பதற்கு கீழுள்ள Clear browsing data என்ற பட்டனை அழுத்தி பிரௌசர் டேட்டாவினை கிளியர் செய்துவிடலாம். 
  • பிறகு அதன் கீழுள்ள  Password and forms  என்ற தலைப்பின் கீழுள்ள Manage save password என்பதில் கிளிக் செய்யுங்கள். 
  • அங்கு இருக்கும் உங்கள் மின்னஞ்சல் மற்றும் அதற்கான பாஸ்வேர்ட் பதிந்து வைத்திருப்பதில் உள்ள குளோஸ் பட்டனை அழுத்தி Done என்பதைக் கொடுக்கவும். இனி உங்களுடைய மின்னஞ்சல் கணக்கின் பாஸ்வேர்ட் ஆனது அந்த கூகிள் குரோம் பிரோசரிலிருந்து நீங்கிவிடும். 


ஒவ்வொரு முறையும் நீங்கள் மற்றவர்களின் கணினியிலோ அல்லது பிரௌசிங் சென்டரில் போய் இணையத்தைப் பயன்படுத்தி முடித்த பிறகு வெளியேறும் முன்பு இச்செயல்களை செய்ய மறக்காதீர்கள்.

படங்கள்:







உங்கள் தகவல்கள் இதன் மூலம் பாதுகாக்கப்படும்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் மறக்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்...

1 comment: