Monday, November 5, 2012

HARD DISK ஐ FORMAT செய்யாமல் புதிய PARTITION உருவாக்கலாம்?


கணனியை Format செய்யாமல் Partition களை உருவாக்குவது சாத்தியமா? சில சந்தர்ப்பங்களில் கணனி வன்தட்டில் மேலதிக பிரிவுகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் எந்த முடிவை எடுப்பீர்கள்? Format செய்து பின் hard disk கினை தேவையான partition களாக பிரிப்பது என்ற முடிவையே பலரும் எடுக்கின்றனர்.இதற்கு வேறான மென்பொருட்களும் அவசியமில்லை. மேலும் அத்தியவசிய கோப்பிகள், உறைகளை வேறு இயக்கிகளுக்கு (separate drives) மாற்ற அல்லது பிரதி செய்து (copy) கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.


கீழ் வரும் படிமுறைகளை பின்பற்றி புதிய Partition ஒன்றை SYSTEM DRIVE இல் உருவாக்கிக் கொள்ளலாம்.

1) முதலில் My Computer இல் Right click செய்து Manage என்பதை தெரிவு செய்யுங்கள் பின் Computer Management Window தோன்றும்.
2) அதில் Storage சென்று Disk management என்பதை click செய்யுங்கள்.
3) அதில் வன்தட்டு , எனைய storage media க்களின் தகவல்கள் காண்பிக்கப்பட்டிருக்கும்.
இப்பொழுது உங்களுக்கு Partition செய்யவேண்டிய Disk Drive வினை தெரிவுசெய்யுங்கள்.
4) பின்னர் அதில் Right click செய்யது Shrink Volume என்பதை click செய்யுங்கள். அதன் பின்னர் windows தன்னியக்கமாக அந்த Partition இல் உள்ள free space ன் அளவை காட்டும்.
5) Shrink வின்டோவில் partition பிரிக்க தேவையான disk size வழங்குங்கள். இதன் போது hard disk கில் காட்டப்படும் free space இன் அளவினை பொருத்து தீர்மானிக்க.
6) பின்னர் shrink என்பதை click செய்யுங்கள் .சில வினாடிகளிலேயே புதிய Disk கோப்புகளுக்கு எதுவித பாதிப்புகளை ஏறப்படுத்தால் தோன்றும்.
7) புதிதாக உருவாக்கப்பட்ட Disk இன்னும் accessible செய்யப்படவில்லை.
8) இப்பொழுது unallocated drive இல் Right click செய்து New Simple Volume என்பதை தெரிவு செய்யுங்கள்.
9) Next பொத்தானை Click செய்க .இப்பொழுது Partition னுக்கு தேவையான size இனை வழங்குங்கள். (you can choose whole size right now).
10) Drive Letter இனை தெரிவு செய்த பின் Next பொத்தானை கிளிக் செய்யுங்கள்.
11) பின்னர் Format Settings இல் NTFS என்பதை File System பிரிவில் தெரிவு செய்யுங்கள். Allocation Unit Size பிரிவில் Default என்பதையும். Volume label இல் New Volume எனவே விட்டுவிடலாம். (தேவையானால் மாற்றிக்கொள்ளவும் முடியும்).
12) Perform a Quick Format என்பதை Check இசய்யது Next Button-னை click செய்யுங்கள் .புதிய வன்தட்டுப் பிரிவு தயாராகிவிட்டது.

No comments:

Post a Comment