Monday, September 30, 2013

இணையத்தள பக்கங்களில் ”Right Click” வசதியை செயற்படுத்துவது எப்படி?



சில பல இணையத்தளங்கள், அவற்றினுடைய செய்திகளின் பதிப்புரிமை, பதிவுத்திருட்டு மற்றும் இன்ன பிற காரணிகளினடிப்படையில் Right Click வசதியை முற்றாக பயன்படுத்த முடியாதவாறு அதாவது Disable செய்தே வைத்திருப்பார்கள்.
ஆனாலும் எங்களுக்கு சிலவேளைகளில் அதில் உள்ள தகவல்களை Copy செய்யவோ அல்லது படங்களை Download செய்யவோ வேண்டிய தேவை ஏற்படலாம்.  Screenshot வசதி இத்தகைய  சில வேளைகளில் கைகொடுத்தாலும் Right Click வசதி அக்டிவ்வாக இருப்பது போல் வராதுதானே.
ஆகவேதான் இந்த பதிவில், Right Click வசதி Disable செய்யப்பட்ட இணையப்பக்கங்களில் அவ்வசதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.
ஆக இதற்கு ஒரு சிம்பிளான தீர்வொன்று இருக்கிறது, அதாவது உங்கள் உலவிகளில் உள்ள JavaScript வசதியை disable செய்வதுதான். இதன்மூலம் எந்தவொரு இணையப்பக்கத்திலும் Right Click வசதியை உங்களால் வழமை போன்று பயன்படுத்திக்கொள்ளக் கூடியதாகவிருக்கும்.

இணைய உலவிகளில் எப்படி JavaScript வசதியை disable செய்வது?
Google Chrome உலவியில்,
1. Settings —>>> + Show advanced settings என்ற பகுதிக்கு சென்று அங்கே Privacy என்பதன் கீழுள்ள Content Settings என்பதை அழுத்துங்கள்.
2. இப்போது தோன்றியிருக்கும் புதிய பாப்-அப் வின்டோவில் JavaScript என்ற பகுதியிலுள்ள 2வது தெரிவை – ”Do not allow any site to run JavaScript” என்பதை தெரிவுசெய்துவிட்டு Done கொடுங்கள். அவ்வளவுதான்…
Shortcut Settings Method
Click on the Wrench Icon 
Go to Settings —>>> + Show advanced settings
click on Content Settings
select ”Do not allow any site to run JavaScript”
Done
*குரோமில் கூடுதல் வசதி, அதாவது மேற்குறிப்பிட்ட முறையில் நாம் பார்க்கும் அனைத்து இணையத்தள பக்கங்களிலும் JavaScript  வசதி செயலிழக்கச்செய்யப்படுகிறது. ஆனாலும் இதனை disable செய்ய வேண்டிய தேவை ஒரு சில இணையப்பக்கங்களுக்கே தேவைப்படலாம். ஆகவே அத்தகைய இணையப்பக்கங்களுக்கு மட்டும்  JavaScript வசதியை disable செய்தால் போதும்தானே. அப்படியானால் JavaScript பகுதியிலுள்ள Manage Exceptions என்பதை அழுத்தி Hostname pattern பெட்டியில் குறித்த இணையதளத்தின் முகவரியை கொடுத்து Block செய்துவிட்டால் ஒகே. இதன்பிறகு குறித்த அந்த இணையத்தளத்தினை பார்க்கும் போது  மட்டும் JavaScript வசதி இணைய உலவியில் disable செய்யப்பட்டிருக்கும்.
Mozilla FireFox உலவியில்,
1.Settings —>>> வழியே Content பகுதிக்கு சென்று அங்குள்ள Enable JavaScript என்பதில் Uncheck செய்துவிட்டு OK கொடுங்கள். அவ்வளவுதான்
Shortcut Settings Method
Go to Settings —>Content
Unchecked the box Enable JavaScript
Click OK
Internet Explorer உலவியில்,
1.Tools ( Alt+x) ->>>>வழியே  Internet options பகுதிக்கு சென்றால் புதிய pop-up வின்டோ ஒன்று தோன்றும்.
2.அந்த pop-up வின்டோவில் Security பகுதிக்கு சென்று Custom Level என்பதில் க்ளிக் செய்யவேண்டும்.
3.இப்போது இன்னொரு புதிய pop-up வின்டோ திறந்துகொள்ளும், அதிலே Scripting பகுதியிலுள்ள Active Scripting என்பதை disable செய்துவிட்டு OK கொடுங்கள். அவ்வளவுதான்…
Shortcut Settings Method
Go to Tools—–>Internet options—–>Security
Click on Custom Level
find Scripting Section
disable Active Scripting
Click on OK.
Important notice:- அவசியம் தேவையான சந்தர்ப்பங்களின் போது மட்டுமே JavaScript வசதியை disable செய்து இணைய உலவியை பயன்படுத்துங்கள். மறக்காமல் உங்களுடைய தேவை முடிந்ததும் JavaScript வசதியை Re Enable செய்திடுங்கள்.

No comments:

Post a Comment