Saturday, July 7, 2012

கூகுள் தேடலில் ஏற்கனவே பார்த்த பக்கங்கள் மீண்டும் வருவதை தவிர்க்க



இணையத்தில் கொட்டி கிடக்கும் தகவல்களை நொடிப்பொழுதில் நமக்கு வழங்கும் தேடியந்திரங்களில் கூகுளின் சேவை சிறப்பானதே. கூகுளில் ஏதேனும் தீவிர மாக தேடி கொண்டிருக்கும் பொழுது நாம் ஏற்க்கனவே பார்த்த பக்கங்களும் சேர்ந்தே வரும். இதனால் ஒரே பக்கத்தை திரும்ப திரும்ப பார்க்க வேண்டிய சூழல் உண்டாவதுடன் நமக்கு தேவையான தீர்வை கண்டறிய அதிக நேரம் செலவழிக்க வேண்டியாகி உள்ளது. இந்த பிரச்சினைகளை தவிர்க்க ஏற்க்கனவே பார்த்த பக்கங்களை மறுபடியும்
கூகுள் தேடலில் காட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கீழே பாப்போம்.

இதற்க்கு கூகுளில் ஒரு வசதி உள்ளது. கூகுள் தேடியந்திரத்தில் தேடிகொண்டிருக்கும் பொழுது அதே பக்கங்களை மறுபடியும் வருவதை தவிர்க்க கூகுள் பக்கத்தில் Show Search Tools என்பதை கிளிக் செய்யுங்கள். 


அதை கிளிக் செய்த உடன் சில தேடல் வசதிகள் வரும் அதில் Not Yet Visited என்பதை கிளிக் செய்தால் போதும் ஏற்கனவே பார்த்த பக்கங்களை நீக்கி புதிய தேடல் முடிவுகளை கூகுளில் காணலாம். 


இந்த முறையில் ஏற்க்கனவே பார்த்த பக்கங்களை தவிர்த்து சரியான முடிவுகளை பெறலாம். 

No comments:

Post a Comment