சில நிறுவனங்களில் அல்லது Browsing center களில் எமக்கு தேவையான Software
ஐ Install பண்ணி இருக்க மாட்டார்கள் எம்மையும் Install பண்ண விடமாட்டார்கள். அவ்வாறான இடம்களில் தான் potable software கைகொடுக்கும். ஆனால் எமக்கு தேவையான Potable software எங்கு தேடியும் கிடைக்காவிட்டால்!!!!!
அதற்குத்தான் ஒரு software ஐ potable ஆக மாற்ற எமக்கு தெரிந்திருந்தால் எவ்வளவு வசதி ஒரு software எப்படி potable ஆக மாற்றுவது என்று பார்ப்போம்
தேவையான மென்பொருட்கள்
1. Universal Extractor
2. WinRar
இவ்விரு Software களையும் install பண்ணிய பின்Potable ஆக மாற்ற விரும்பிய software இன் setup file மேல் mouse pointer ஐ வைத்து Right click செய்து அதில் uniExtract to subdir ஐ கிளிக் செய்யவும்.
அது தானாக extract ஆகி அந்த setup ப்ரோக்ராம் இன் பெயரில் புது Folder உருவாக்கி இருக்கும். அந்த folder இன் உள் அனேகமாக {app} என்ற folder இருக்கும் அல்லது extract பண்ணி வந்த folder ஏதாவது ஒன்றில் potable ஆக மாற்ற விரும்பிய software இன் .exe file இருக்கும்
அந்த folder இல் உள்ள அனைத்து file களையும் select செய்து எதாவது ஒரு File இன் மேல் mouse இ வைத்து right click செய்து Add to Archive இ கிளிக் செய்யவும்.
அதில் Archive name என்ற இடத்தில் software இன் பெயரையும் Compression method இல் Best என்பதையும் Create SFX archive என்பதையும் Select செய்யவும்.
Advanced tab இல் SFX option என்ற பட்டன் ஐ click செய்யவும்.அதில் Run after extraction அந்த Folder இல் காணப்படும் .exe file இன் பெயரை டைப்செய்யவும் (folder இல் காணப்படும் .exe file லை rename செய்து பெயரை copy செய்து paste செய்தல் நன்று )
Modes என்ற tab இல் உள்ள hide all ஐ உம் Overright all files ஐயும் Select செய்யவும்.
பின் Text and icon என்ற tab இல்Load SFX icon from the file இல் நீங்கள் potable software இக்கு கொடுக்க விரும்பும் icon file select செய்து ok பட்டன் click செய்து வெளியேறவும்.
தானாகவே உங்கள் கோப்பை சுருக்கி potable software ஆக மாற்றித்தரும்.
முயற்சி செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்
No comments:
Post a Comment