Sunday, February 3, 2013

எக்‌ஷெல்லில் குறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு.

எக்‌ஷெல் பற்றி நம்மில் அநேகருக்கு தெரியும் கிட்டதட்ட இதுவும் ஒரு கடல் போலத்தான் எக்‌ஷெல்லில் எத்தனையோ விதமான காரியங்களை செய்யமுடியும் அந்தளவுக்கு அதன் திறன் இருக்கும், சொல்லப்போனால் எக்‌ஷெல்லுக்கென்றே ஒரு தளம் ஆரம்பித்து எழுதலாம் ஆனாலும் நான் இந்த பதிவின் வாயிலாக ஒரு எக்‌ஷெல்லில் குறிப்பிட்ட செல்களை மட்டும் எப்படி எடிட் செய்யவிடாமல் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

நான் உபயோகிப்பது மைக்ரோசாப்ட்டின் ஆபிஸ் தொகுப்பு2010 (Microsoft Office 2010) ஆனால் இதே வழிமுறைதான் மற்ற தொகுப்புகளிலும் இருக்கும் சரி இப்போது புதிதாய் ஒரு எக்‌ஷெல் திறந்து

வேர்டுக்கும் எக்ஸெலுக்கும் பூட்டு போடு


நண்பர்களே நாம் சில நேரங்களில் நம்முடைய தகவல்கள் அடங்கிய வேர்டு மற்றும் எக்ஸெல் பைல்களை ஏதாவது ஒரு காரணத்திற்காக யாரும் படிக்க அனுமதிக்காமல் இருக்க அதற்கு கடவுச்சொல் கொடுத்து திறக்கவிடாதபடி செய்வோம் அதை இங்கு தெரியாத நண்பர்களுக்காக இங்கே பகிர்ந்துகொள்கிறேன் இது பற்றி முன்பே தெரிந்தவர்கள் தயவுசெய்து மன்னிக்கவும்.

சரி இங்கு மைக்ரோசாப்ட் ஆபிஸ் தொகுப்பு 2003 மற்றும் 2007 இரண்டுக்குமே அதற்கான வழிகளை

வேகமான இனையவேகத்திற்கு சரியான DNS முகவரி அறிய


இந்த பதிவின் வழியாக நாம் வசிக்கும் இடத்திற்கு ஏற்ற DNS முகவரி எப்படி தெரிந்து செயல்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம், யாராவது புதியவர்கள் இருந்து DNS என்றால் என்ன கேட்பதானால் அதை பற்றி ஒரு சிறிய விளக்கமாக கணினியின் DNS மாத்து இனைய வேகத்தை கூட்டு பதிவை பாருங்கள் இதன் உபயோகம் எந்தளவிற்கு முக்கியம் என்பது புரியும்.

கணினியின் DNS மாத்து இனைய வேகத்தை கூட்டு



கணினியில் சில சிறிய விஷயங்களில் சின்ன மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் இனையவேகத்தை கொஞ்சம் அதிகரிக்கலாம் அதற்கு நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளை பார்க்கலாம் இதற்கான இலவச DNS (Domain Name System) நான்கு நிறுவனங்கள் வழங்குகின்றன இவர்கள் தரும் முகவரியை மாற்றுவதன் மூலம் இனையவேகத்தை கொஞ்சம் அதிகரிக்கலாம்.

இனி நீங்கள் செய்யவேண்டியது My Network Places என்பதின் பிராப்பர்ட்டிஸ் தேர்வு செய்யுங்கள் இப்போது உங்களுக்கு Local Area Connection என்பதாக ஒரு விண்டொ திறக்கும் அதில் மீண்டும் வலது கிளிக்கில் அதனுடைய பிராப்பர்ட்டிஸ் கிளிக்கவும்.



இப்போது உங்களுக்கு கீழிருக்கும் படத்தில் உள்ளது போல ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் அதில் நீங்கள் General என்கிற டேப்பை திறந்து Internet Protocol (TCP/IP) என்பதை தெரிவு செய்து படத்தில் நான் காண்பித்துள்ளது போல Properties என்பதை கிளிக்குங்கள்.



இப்போது மீண்டும் ஒரு பாப் அப் விண்டோ திறக்கிறதா இங்குதான் உங்கள் கணினியின் IP Address மற்றும் செர்வரின் முகவரி இருக்கும் நீங்கள் ஐபி-யை ஒன்றும் செய்யவேண்டாம் நான் படத்தில் அடையாளம் காண்பித்துள்ள இடத்தில் நீங்கள் கீழே கொடுத்துள்ள ஏதாவது ஒரு நிறுவனத்தின் DNS முகவரியை டைப் செய்யவும்.



நான் மேலே சொன்ன நான்கு நிறுவனங்களும் அவர்கள் இலவசமாக வழங்கும் DNS முகவரிகளும் ஒவ்வொன்றாக மாற்றிப்பார்த்து உங்களுக்கு எது வேகத்தை அதிகரிப்பதாக நினைக்கிறீர்களோ அதையே உங்கள் கணினியின் DNS முகவரியாக வைத்துக்கொள்ளுங்கள் வேண்டுமானல் தற்போதைய DNS முகவரி தெரிந்துகொள்ள Start -> Run -> டைப் cmd திறக்கும் கமாண்ட் பிராம்ப்ட்டில் ipconfig/all என டைப் செய்தால் உங்கள் கணினியின் ஐபி மற்றும் DNS முகவரி இருக்கும். உங்கள் இனையவேகத்தை சோதனை செய்து பார்க்க இனைய சோதனை 1 , இனைய சோதனை 2சென்று சோதித்து பார்க்கவும்.

நிறுவனங்களும் இலவச செர்வர் முகவரிகளும்

1.ScrubIT DNS Service

Preferred DNS Server 67.138.54.100
Alternate DNS Server 207.225.209.66

2.Dnsadvantage DNS Service

Preferred DNS Server 156.154.70.1
Alternate DNS Server 156.154.71.1

3.OpenDNS DNS Service

Preferred DNS Server 208.67.222.222
Alternate DNS Server 208.67.220.220

4.Google DNS Service

Preferred DNS Server 8.8.8.8
Alternate DNS Server 8.8.4.4

MP3 பாடலில் உங்கள் போட்டோவையும் இனைக்கலாம்.



 இந்த பதிவின் வாயிலாக MP3 பாடலில் ஒரு போட்டோவை எப்படி இனைப்பது என்பது பற்றி பார்க்கலாம். உங்களில் சிலராவது சில MP3 பாடல்களை விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கும் போது விண்டோஸ் மீடியா பிளேயரின் வலது பக்கம் அந்த பாடலின் படத்துடைய போட்டோவோ அல்லது பாடிய நபரின் போட்டோவோ பார்த்திருக்க கூடும் இல்லையா? இதைப்பற்றி சிலருக்கு தெரிந்திருக்கலாம் சிலருக்கு எப்படி என்ற கேள்வி இருக்குமேயானால் அதற்கான விடையைத்தான் இப்போது பார்க்க போகிறோம். இதற்கான வழிமுறைகள் மூன்று விதங்களில் இருக்கிறது நாம் முதல் இரண்டு வழிகளை பார்க்கலாம்.