Sunday, February 3, 2013

வேர்டுக்கும் எக்ஸெலுக்கும் பூட்டு போடு


நண்பர்களே நாம் சில நேரங்களில் நம்முடைய தகவல்கள் அடங்கிய வேர்டு மற்றும் எக்ஸெல் பைல்களை ஏதாவது ஒரு காரணத்திற்காக யாரும் படிக்க அனுமதிக்காமல் இருக்க அதற்கு கடவுச்சொல் கொடுத்து திறக்கவிடாதபடி செய்வோம் அதை இங்கு தெரியாத நண்பர்களுக்காக இங்கே பகிர்ந்துகொள்கிறேன் இது பற்றி முன்பே தெரிந்தவர்கள் தயவுசெய்து மன்னிக்கவும்.

சரி இங்கு மைக்ரோசாப்ட் ஆபிஸ் தொகுப்பு 2003 மற்றும் 2007 இரண்டுக்குமே அதற்கான வழிகளை
பார்க்கலாம் முதலில் 200 வேர்ட், எக்ஸெலில் கடவுச்சொல் கொடுப்பதை பார்க்கலாம்.

மைக்ரோசாப்ட் வேர்ட் 2003

படத்தில் காண்பித்துள்ளபடி Tools கிளிக்கி அதில் Options தெரிவு செய்யுங்கள்.



இனி இப்படியாக ஒரு பாப் அப் திற்க்கும் அதில் Password to open என்பதில் நீங்கள் விரும்பும் கடவுச்சொல்லை கொடுங்கள் நீங்கள் விரும்பினால் மட்டும் Advanced என்பதை கிளிக்கி தேவையான மாற்றங்கள் செய்யுங்கள் ஆனால் அது உங்களுக்கு தேவைப்படாது எனவே Password to openல் கடவுச்சொல் கொடுத்ததும் கீழே இருக்கும் ஓக்கே பட்டனை அழுத்தி ஓக்கே கொடுத்து விடுங்கள்.



இனி இப்படியாக திற்க்கிறதா நீங்கள் முன்னர் கொடுத கடவுச்சொல்லை இங்கேயும் கொடுங்கள் அவ்வளவுதான் இனி உங்கள் வேர்ட் பைல் கடவுச்சொல் இல்லாமல் திறக்கமுடியாது.



மைக்ரோசாப்ட் எக்ஸெல் 2003

படத்தில் காண்பித்துள்ளபடி Tools கிளிக்கி அதில் Options தெரிவு செய்யுங்கள்.



இனி இப்படியாக ஒரு பாப் அப் திற்க்கும் அதில் Security டேப்பை திறந்து Password to open என்பதில் நீங்கள் விரும்பும் கடவுச்சொல்லை கொடுங்கள் நீங்கள் விரும்பினால் மட்டும் Advanced என்பதை கிளிக்கி தேவையான மாற்றங்கள் செய்யுங்கள் ஆனால் அது உங்களுக்கு தேவைப்படாது எனவே Password to openல் கடவுச்சொல் கொடுத்ததும் கீழே இருக்கும் ஓக்கே பட்டனை அழுத்தி ஓக்கே கொடுத்து விடுங்கள்.



இனி இப்படியாக திற்க்கிறதா நீங்கள் முன்னர் கொடுத கடவுச்சொல்லை இங்கேயும் கொடுங்கள் அவ்வளவுதான் இனி உங்கள் எக்ஸெல் பைல் கடவுச்சொல் இல்லாமல் திறக்கமுடியாது.



மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் எக்ஸெல் 2007

இதில் மைக்ரோசாப்ட்டின் ஆபிஸ் பட்டனை கிளிக்கினால் கீழிருப்பது போல திறக்கும் அதில் நீங்கள் கடவுச்சொல கொடுக்கவேண்டிய பைலை திறந்து Prepare என்பதில் கிளிக்கி அதில் வரும் Encrypt Document என்பதை தேர்வு செய்யவும்.



இனி உங்களுக்கு இப்படியாக ஒரு பாப் அப் திற்க்கும் இதில் நீங்கள் கடவுச்சொல்லை கொடுத்து ஓக்கே கொடுத்ததும் மீண்டும் ஒரு பாப் அப் திறந்து உங்கள் கடவுச்சொல்லை ஊர்ஜிதம் செய்ய சொல்லும் அதையும் செய்து விடுங்கள் அவ்வளவுதான் இனி மைக்ரோசாப்ட் 2007 லிலும் கடவுச்சொல் இல்லாமல் திறக்கமுடியாது.



என்ன நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு உபயோகமானதாக இருந்ததா மேலும் பல நண்பர்களுக்கு சென்றடைய உதவுங்கள் குறைந்தபட்டம் உங்கள் நண்பர்களோடு அறிவுப்பகிர்தலாவது செய்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment