இந்த பதிவின் வழியாக நாம் வசிக்கும் இடத்திற்கு ஏற்ற DNS முகவரி எப்படி தெரிந்து செயல்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம், யாராவது புதியவர்கள் இருந்து DNS என்றால் என்ன கேட்பதானால் அதை பற்றி ஒரு சிறிய விளக்கமாக கணினியின் DNS மாத்து இனைய வேகத்தை கூட்டு பதிவை பாருங்கள் இதன் உபயோகம் எந்தளவிற்கு முக்கியம் என்பது புரியும்.
இந்த மென்பொருளின் பெயர் NAME BENCH என்பதாகும் இந்த மென்பொருள் என்ன செய்கிறது இதை கணினியில் நிறுவத் தேவையில்லை நேரடியாக இயக்கலாம் திறந்து நீங்கள் இருமுறை க்கிளிக்கியவுடன் இயங்க தொடங்கி விடும் என்ன கொஞ்சம் நேரம் காத்திருக்க வேண்டும் குறைந்த பட்சம் ஐந்து நிமிடங்களுக்கான அவகாசம் எடுத்துக்கொண்டு செயல்படுகிறது இறுதியில் நீங்கள் வசிக்கும் பகுதியில் உங்கள் இனைய இனைப்பின் வேகத்தை அதிகரிக்கும் வகையிலான DNS செர்வர் முகவரிகளை வழங்கும். மென்பொருள் தரவிறக்கத்திற்கு Name Bench DNS Finder
என்ன நண்பர்களே முகவரியை குறித்துக்கொண்டோம் இனி என்ன செய்வது என கேட்பவர்கள் நான் முன்னமே எழுதியிருந்த கணினியின் DNS மாத்து இனைய வேகத்தை கூட்டு பதிவில் அதற்கான வழிமுறை இருக்கிறது முயற்சி செய்து பார்க்கவும் மாற்றங்கள் நிச்சியம் இருக்கும்
No comments:
Post a Comment