Wednesday, July 31, 2013

ஜிமெயிலின் இரண்டு அடுக்கு பாதுகாப்பை அமைத்திடுவோம்



நம்முடைய ஜிமெயில் கணக்கு உள்ள திரையை தோன்றசெய்து  அதில் உள்நுழைவுசெய்திடுக
70.9.1
2)  உடன்தோன்றிடும் திரையில் Security என்ற திரையை தோன்றசெய்து அதில் 2step  verification  என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
3)பிறகு தோன்றிடும்  அடுத்த திரையில் குறுஞ்செய்தியாக அனுப்புவதற்கான நம்முடைய Mobile  எண் அல்லது குரலொலிக்கான  android, blackberry and iPhone  ஆகிவற்றிலொரு எண்  ஆகிய இரண்டில் ஒன்றை   உள்ளீடுசெய்க இங்கு குறுஞ்செய்தியாக அனுப்புவதற்கான Mobile யின்  எண்  வழங்கபட்டுள்ளது
 70.9.2
4) பின்னர் Send Code option என்ற வாய்ப்பை தெரிவுசெய்து கொள்க  உடன் உள்நுழைவுசெய்வதற்கான குறியீட்டெண் நம்முடைய Mobile க்கு Message யாக வந்துவசேரும் அதனை அதற்கான உரைபெட்டியில் உள்ளீடுசெய்து அடுத்த திரைக்கு செல்க
5) அடுத்து தோன்றிடும் திரையில் நம்முடைய Mobile தொலைந்துபோனால் காப்புநகல் செய்வதற்கான குறியீட்டெண்களை திரையில் பிரதிபலிக்கும் அதனைஅச்சிட்டு வைத்துகொள்க
70.9.3
 6) அதுமட்டுமல்லாது அடுத்து தோன்றிடும் திரையில் இரண்டாவதாக மற்றொரு Mobile எண்ணை உள்ளீடுசெய்திடுக  இதன்பின் turn on 2-step verification என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .
70.9.4
7) இதன்பின்  மீண்டும் அனைத்து கணக்குகளும் முதலில் இருந்து மறுதொடக்கம் செய்யவேண்டும் என்ற எச்சரிக்கை செய்திபெட்டியில் ok என்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக
70.9.5
8 )இதன்பின் இணையஉலாவியில் நம்முடைய கணக்கினை மறுதொடக்கம் செய்தால் நம்முடைய Mobile க்கு வரும் Message யில் உள்ள குறியீட்டு எண்களை உள்ளீடுசெய்து verifyஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின்னரே  நம்முடைய கணக்கு உள்ள திரைக்கு செல்லமுடியும்
70.9.6
இவ்வாறு நம்முடைய ஜிமெயில் கணக்கினை இரண்ட்டுக்கு பாதுகாப்பில் அமைத்திடுக

No comments:

Post a Comment