Tuesday, July 9, 2013

Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும்

அசுரத்தனமான விஞ்ஞான வளர்ச்சியில் இன்று கணினியின் வளர்ச்சியும் ஒன்று இந்த கணினி என்பதே இன்று இனையம் சார்ந்த ஒன்றாகி விட்டது அதனாலோ என்னவோ இனையத்தில் பாதுகாப்பு தன்மை என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது என்றால் மிகையில்லை, இனையத்தை திறந்தால் இனைய வழி திருட்டு அதாவது நாம் அறியாமல் நம் தகவல்களை திருடுவது இதில் ஆன்லைன் வங்கி திருட்டும் அடங்கும் இன்னும் இது போல எத்தனையோ, முன்பெல்லாம் வைரஸ் என்பது பெரிய பிரச்சினையாக இருந்து இப்போதெல்லாம் வைரஸ் கூட பெரிய பிரச்சினை இல்லையென்றே நினைக்க தோன்றுகிறது அந்தளவிற்கு கீலாக்கரின் பிரச்சினை இருக்கிறது. நீங்கள் இனைய வழி மேற்கொள்ளும் அத்தனை
நடவடிக்கைகளையும் இந்த கீலாக்கர் மென்பொருள் அழகாய் மின்னஞ்சல் செய்து விடும் இதை பதிந்த நபருக்கு, கூகுளில் தேடிப்பார்த்த போது இதை மின்னஞ்சல் வழியாகவும் கணினியில் பதிந்துவிட முடியுமாம்.

இதில் கவணிக்க வேண்டியது என்னவென்றால் வைரஸ் நம் கணினியில் இருந்தால் ஏதாவது ஒரு அறிகுறி வழியாக தெரிந்துவிடும் ஆனால் இந்த கீலாக்கர் நம் கணினியில் பதிந்துவிட்டால் அது இயக்கத்தை நம்மால் அறிந்துகொள்ள முடியாது இந்த புரோகிராம் ஸ்டார்ட் மெனுவிலோ அல்லது கண்ட்ரோல் பேணலிலோ காணமுடியாது ஆனால் டாஸ்க் மேனேஜர் வழியாக இயங்கும் புரோகிராம்களை நாம் தெரிந்துகொள்ள முடியும் அதுவும் எல்லா பெயர்களையும் வாசித்து பார்த்து பின் கூகுளில் தேடிப்பார்த்தால் உண்மை தெரிந்துவிடும் ஆனால் இது எல்லோருக்கும் முடிவதில்லையே.

இப்போது இந்த கீலாக்கரின் விபரீதம் உங்களுக்கு புரிந்திருக்கும் சரி முதலில் உங்கள் கணினியில் கீலாக்கர் நிறுவப்பட்டுள்ளதா என அறிந்துகொள்ள கீலாக்கர் டிடெக்டர் தரவிறக்கி பரிசோதித்து பார்க்கவும் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது உங்கள் கணினியில் கீலாக்கர் இருந்தால் காட்டிகொடுத்துவிடும் ஆனால் அதை அழிப்பதற்கான வசதி இல்லை இருந்தாலும் என்ன வகையான கீலாக்கர் என்று தெரிந்துகொண்டு கூகுளில் தேடினால் அதற்கு வழி கிடைக்கும்(சரியான தீர்வு கொடுக்க முடியவில்லை காரணம் 62;வ்வொரு கீலாக்கரின் ரிமூவ் செய்யும் முறையும் மாறுபடுகிறது). உங்களால் முடியாத பட்சத்தில் கீலாக்கர் கில்லர்தரவிறக்கி அழிக்க முயற்சிக்கவும் நீங்கள் தவறாக அழிக்கும் நேரத்தில் கணினியின் இயங்குதளம் மீண்டும் பதிய நேரலாம் எனவே கவணம் அவசியம்.

சரி நண்பர்களே உங்கள் கணினியில் இனி உங்களை அறியாமல் மீண்டும் வந்துவிட்டாலும் உங்களை பாதிக்காமல் இருப்பதற்காக கீ ஸ்கிராம்பிலர் தரவிறக்கி கணினியில் பதியவும் இது இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் நெருப்பு நரியில் சிறப்பாக செய்ல்படுகிறது இதை கணினியில் நிறுவியவுடன் கீழே டாஸ்க் பாரில் வந்து அமர்ந்துகொள்ளும் நீங்கள் இனையத்தை உபயோகிக்கும் போது மட்டும் ஒரு ஐகான் வந்திருக்கும் நீங்கள் டைப் செய்யும் போது அந்த எழுத்துகளை என்கிரிப்ட் செய்துவிடும் நீங்கள் உப்யோகிக்கும் போது உங்களுக்கே புரியும், நீங்கள் நெருப்பு நரி மட்டும் உப்யோகிக்கிறீர்கள் என்றால் கீ ஸ்கிராம்பிலர் ஆட் ஆன் பதிந்துகொள்ளவும் இனி நீங்கள் தைரியமாக இனையவழியில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம், நீங்கள் டைப் செய்யும் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்பட்டுவிடும்.

மேலதிகமாக இன்னும் ஒரு தகவலையும் எழுதிவிடுகிறேன்விண் பாட்ரோல் மென்பொருளையும் கணினியில் பதிந்துவிடுங்கள் எந்த மென்பொருளும் உங்கள் அனுமதியில்லாமல் உள்ளே நுழையமுடியாது, மேலும் உங்கள் ஆண்டிவைரஸ் மென்பொருளை எப்போதும் மேம்படுத்திய நிலையிலே வைத்திருங்கள், கூடுமானவரை பிரவுசிங் செண்டரிலோ அல்லது அறிமுகமில்லாத நபர்களின் கணினியிலோ வங்கி கணக்கை பயன்படுத்த வேண்டம்.

No comments:

Post a Comment