Thursday, October 31, 2013

மதர்போர்ட் என்றால் என்ன?



மதர்போர்ட்
இது கணினியின் அனைத்து வன்பொருள்களும் சங்கமிக்கும் ஒரு பெரிய சர்க்யூட் பலகையாகும்.இதை ஆங்கிலத்தில் Printed Circuit Board (PCB ) என்பர்.ஏனென்றால் சர்க்யூட்கள் அனைத்தும் பலகையிலே அச்சடிக்கப்படுவதால் இது பிரின்டட் சர்க்யூட் போர்ட் என்று அழைக்கப்படுகிறது.



மின் இணைப்பான்: 
மின்சப்ளை பகுதியிலிருந்து(SMPS) வரும் மின்சாரத்தை மதர்போர்டுக்குக் கொடுக்கு உதவுகிறது.
பிராஸசர் இணைப்பான்:

பிராஸசரை மதர்போர்டுடன் இணைக்கப்பயன்படுகிறது.
சில்லுத்தொகுப்பு: 

பலவகை கட்டுப்பாட்டு சர்க்யூட்கள் உள்ளிணைக்கப்பட்ட ஒரு சில்லு ஆகும்.இதை மையமாக வைத்தே மதர்போர்ட் வடிவமக்கப்படுகிறது.
நினைவக இணைப்பான்: ராம் நினைவகத்தை மதர்போர்டுடன் இணைக்கப்பயன்படுகிறது.இது சிம்(SIMM),டிம்(DIMM),ரிம்(RIMM) எனப் பலவகைப்படும்.
பயாஸ் ரோம்(BIOS):இது கணினியின் அடிப்படை செயல்களுக்கான மென்பொருளை கொண்டிருக்கும் அழியா நினைவகம் ஆகும்.
சீமாஸ் மின்கலம்(CMOS Battery):

ஒரு ரூபாய் நாணயம் அளவு சிறிய மின்கலம் மதர்போர்டில் இருக்கும்.நமது வன்பொருள்களை பற்றிய தகவல்களை சேமித்துவைத்திற்கும் நினைவகத்திற்கு தொடர்ந்து மின்சப்ளை கொடுப்பதற்காக உள்ளது.

No comments:

Post a Comment