Friday, June 29, 2012

Face Book-ல் புதிய வசதி - கமன்ட் எடிட்டிங்.




புதிய கமன்ட் எடிட்டிங் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது சமூக வலைத்தளமான பேஸ்புக். போட்டோ வியூவர் போன்ற பல புதிய வசதிகளை உருவாக்கி கொடுத்த பேஸ்புக் இப்போது கமன்ட் எடிட்டிங் ஆப்ஷனையும் வழங்குகிறது. முன்பெல்லாம் நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே! என்பது போல எழுதிய கமன்ட் எழுதியது தான். அதை எடிட் செய்ய முடியாது என்று இருந்தது. அப்படியே எழுதிய கருத்தினை மாற்ற வேண்டும் என்றால் அந்த கமன்ட்டை டெலிட் செய்து,
அதன் பிறகு புதிதாக மீண்டும் கமன்ட் எழுதி போஸ்ட் செய்ய வேண்டி இருந்தது.

Wednesday, June 27, 2012

உங்கள் லேப்டாப் திருடப்படாமல் பாதுகாக்க ஒரு அறிய மென்பொருள்



இந்த கணினி உலகில் நாளுக்கு நாள் வசதிகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நம்முடைய வீட்டில் உள்ள Desktop கணினிகள் திருடப்படுவதை விட லேப்டாப் தான் அதிக அல்வாவு திருடப்படுகிறது ஏனென்றால் பாக்கெட்டில் வைத்து செல்லும் அளவிற்கு கூட தற்போது லேப்டாப்கள் வந்துவிட்டன. இதனால் திருடப்படுவதும் நாளுக்கு நாள் வசதியாகி விட்டது. இந்த பிரச்சினைகளை தவிர்க்கவே இந்த அறிய மென்பொருள் நமக்கு உதவுகிறது.

PDF பைல்களை இமேஜ்(jpg,gif,bmp,png,tif) பைல்களாக மாற்ற



PDF பைல்களை எப்படி நாம் இமேஜ் பைல்களாக மாற்றுவது என்று இங்கு காணபோகிறோம். இந்த வேலையை ஒரு சிறிய மென்பொருள் நமக்கு எளிதாக செய்து முடிக்கிறது.
இந்த மென்பொருள் பதிவர்களுக்கு மிகவும் தேவையான மென்பொருள் ஏனென்றால் நாம் ஏதேனும்PDF பைல்களை நம் பதிவில் சேர்க்க வேண்டுமென்றால் அதனை

20GB அளவுள்ள பெரிய வீடியோ பைல்களை Youtube ல் நேரடியாக அப்லோட் செய்ய



கூகுள் வழங்கு சிறந்த சேவைகளில் ஒன்று யூடியுப் தளம். இணையத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்களை அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய தளமாகும். இந்த தளத்தில் நம்முடைய வீடியோக்களையும் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. சாதாரணமாக யூடியுப் தளத்தில் சுமார் 15 நிமிட வீடியோவை தான் அப்லோட் செய்யும் வசதி உள்ளது. இதனால் பெரிய வீடியோ பைல்களை அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. ஆனால் யூடியுப் தளத்தில் 20GB அளவுள்ள 12 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ பைல்களையும் அப்லோட் செய்யும் வசதி மறைந்து

ஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் Appointment பெறும் வசதி



இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை UIDAI(Unique Identification Authority of India) என்ற அமைப்பின் மூலம் இந்திய அரசு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்த அடையாள அட்டையை வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் மட்டும் தான் இந்த அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 பேர் தான் ஒரு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.

மொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை புதிய கண்டுபிடிப்புகள்



உலகம் முழுவதும் மொபைல் போன்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது. மொபைல் போன்களில் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுக படுத்துவதே மொபைல் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக உள்ளது. விலைகுறைந்த போன்கள் முதல் விலை உயர்ந்த போன்கள் வரை அனைத்து மொபைல்களுக்கும் தேவையான ஒரு அடிப்படை விஷயம் சார்ஜ் போடுவது. இப்பொழுது அனைவரும் மின்சாரம் மூலம் தான் போடுகிறோம். மின்சாரம் இல்லை என்றால் நம் மொபைலை சார்ஜ் போடாமல் உபயோகிக்க முடியாத நிலை உள்ளது.

இந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் காண



இணையம் வாசகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் இணையதளங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. நம் இந்திய அரசும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மற்றும் மாவட்டங்களுக்கும் தனித்தனி இணையதளங்களை உருவாக்கி தங்கள் தகவல்களை இணையத்தில் வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த இணையதளங்கள் அனைத்தயும் URL நாம் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது. உதாரணமாக இந்தியாவில் 627 மாவட்டங்கள் உள்ளது இதில் 569 மாவட்டங்களுக்கு தனி இணையதளங்கள் உள்ளது. இதை எல்லாம் நாம் ஞாபகம் வைத்து கொள்வது

Sunday, June 24, 2012

இன்டர்நெட் வேகம் குறைவாக உள்ள கணினிகளுக்கு - Opera11.11 latest version



இணையம் என்னும் கடலில் நீந்துவதற்கு நமக்கு பயன்படுவது இணைய உலவிகளாகும். இந்த இணைய உலவிகளில் பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது IE,Chrome,Firefox போன்ற உலவிகளாகும். இதற்க்கு அடுத்ததாக அனைவராலும் விரும்பி உபயோகப்படுத்தப்படுவது Opera என்ற என்ற உலவியாகும். இந்த உலவியிலும் வசதிகள் மிக ஏராளம் குறிப்பாக இந்த பிரவுசரில் இணைய வேகம் மிகவும் பிரமாதமாக உள்ளது.  வேகம் குறைவான இணைய இணைப்பு வைத்து இருந்தாலும் இந்த உலவி மூலம் வேகமாக இணையத்தை பயன்படுத்தலாம்.
பயன்கள்:
  • நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Fastest Java Script engine கொண்டுள்ளது.

உங்கள் Facebook நண்பர்களின் முழுவிவரமும் ஒரே இடத்தில் அறிய




பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். உதாரணமாக இந்த மாதத்தில் யாருக்கெல்லாம் பிறந்த நாள் வருகிறது அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்கள் நண்பர்கள் லிஸ்டில் ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவரின் கணக்கிற்கும் சென்று பார்க்க வேண்டும். இது நடக்கிற காரியம் இல்லை. ஆகவே இதுபோன்ற விவரங்களை ஒரே இடத்தில் அறிய ஒரு சூப்பர் வழி உள்ளது. இதன் மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் மேலதிகமான தகவல்களை ஒரே இடத்தில் அறியலாம்.

இணையத்தில் Torrent பைல்களை Download செய்ய சிறந்த 10 தளங்கள்




நாம் இணையத்தில் இருந்து பெரிய பைல்களையும் மற்றும் திரைப்படங்கள், கட்டண மென்பொருட்கள் ஆகியவைகளை இலவசமாக டவுன்லோட் செய்ய வேண்டுமென்றால் டோரென்ட் மூலமாக தான் டவுன்லோட் செய்வோம். இணையத்தில் டோரென்ட் பைல்களை டவுன்லோட் செய்யஏராளமான தளங்கள் உள்ளன. இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட தளங்களே வாசகர்களுக்கு மிக சிறந்த சேவையை தருகின்றன. அதில் சிறந்த பத்து தளங்களை கீழே அதில் உள்ள வசதிகளுடன் பட்டியலிட்டு உள்ளேன் கீழே பார்த்து பயனடைந்து கொள்ளவும்.

கூகுளில் நீங்கள் கேட்பதை உங்கள் மெயிலுக்கே அனுப்புவார்கள்



இணையம் என்பது பல எண்ணிலடங்கா தகவல்களை அடக்கியுள்ளது. இந்த இணையத்தில் கேட்டால் கிடைக்காத தகவல் எதுவுமே கிடையாது. இப்படி பறந்து விரிந்து உள்ள இணையத்தில் நாம் நமக்கு தேவையான தகவல்களை சுலபமாக பெற தேடியந்திரங்கள் உதவுகின்றன. இந்த தேடியந்திரங்களில் சிறப்பான சேவையை வழங்குவது கூகுள் இணையதளமாகும். இந்த கூகுளில் கேட்டால் கிடைக்காத ஒன்று இல்லவே இல்லை. இன்னும் ஒரு படி மேலே போய் நாம் கேட்பதை நமது மெயிலுக்கே கொண்டு வந்து சேர்க்கும் வசதியும் இந்த கூகுளில் உள்ளது. இதில் பதிவு செய்து விட்டால் புது புது தகவல்கள் நம்மை தேடி வரும்.

இலவச Computer Game-களை Download செய்ய சிறந்த 4 Websites




கணினி வைத்திருக்கும் அணைத்து கணினியிலும் எது இருக்கோ இல்லையோ இந்த கேம்கள் மட்டும் தவறாமல் இருக்கும். அப்படி இல்லையென்றாலும் நம்ப குழைந்தைகளின் வற்புறுத்தலுக்கு நாம் இணையத்தில் கணினி கேம்களை தேடினால் ஆயிரம் தளங்கள் வரும் ஆனால் இந்த லிங்கில் க்ளிக் செய்யுங்க முதலில் உறுப்பினர் ஆகுங்க அப்புறம் கடைசியா டிரையல் பதிப்பை கொடுத்து முழுபதிப்பு பதிப்பு வேண்டுமென்றால் இவ்வளவு காசு கட்டுங்க என்று கூறுவார்கள். நம்மில் இந்த நிலைமை பல பேருக்கு ஆகி இருக்கலாம். அந்த பிரச்சினைகளை தவிர்க்கவே கணினிக்கு இலவச விளையாட்டுக்களை டவுன்லோட் செய்யும்

ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்


இப்பொழுது இலவசமாக கிடைக்காதது எதுவுமே இல்லை. இணையத்தில் இலவச மென்பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே கொண்டே வருகிறது. அந்த வரிசையில் மேலும் ஒரு பயனுள்ள மென்பொருள் இந்த Liberkey 5.2.0321 என்ற மென்பொருளாகும். இந்த மென்பொருளில் சுமார் 309 போர்டபிள் மென்பொருட்கள் அடங்கி உள்ளது. இதில் உள்ள மென்பொருட்கள் அனைத்தும் நம் கணினிகளுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருட்கள். இந்த மென்பொருட்களில் மென்பொருட்கள் பல வகைகளாக பிரிக்கப்பட்டு வாசகர்கள் சுலபமாக உபயோகிக்கும் வண்ணம் அமைத்து இருக்கிறார்கள்.
  • இந்த மென்பொருளை டவுன்லோட் செய்தவுடன் உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். 
  • பிறகு அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் உள்ள Liberkey Tools - Manage applications - Install an application Suite இந்த முறையில் க்ளிக் செய்யுங்கள்.
  • அடுத்து உங்களுக்கு வேறு விண்டோ வரும். அதில் உள்ள Download the list of available suits என்ற பட்டனை க்ளிக் செய்யவும். 
  • வரும் விண்டோவில் இதில் உள்ள மென்பொருட்களின் List Basic Suite matrum Standard Suite என்று இரு வகையாக  பிரிக்க பட்டிருக்கும்.
  • அதில் கீழே உள்ள Install all applications on the Selected tool என்ற பட்டனை அழுத்தி மென்பொருட்களை நிருவிகொல்லுங்கள்.
  • இதில் உங்களுக்கு வேண்டாத அல்லது உங்களிடம் ஏற்கனவே உள்ள மென்பொருட்களை டிக் குறியை எடுத்துவிட்டு நீக்கி விடலாம்.


  • இப்பொழுது உங்களுக்கு தேவையான மென்பொருள் இந்த liberkey மென்பொருளில் சேர்ந்து விடும். 
  • இந்த மென்பொருட்களை உங்கள் கணினியில் நிறுவ வேண்டாம். நேரடியாக உங்களுக்கு தேவையான மென்பொருளை க்ளிக் செய்து உபயோகித்து கொள்ளலாம்.