Wednesday, June 27, 2012

PDF பைல்களை இமேஜ்(jpg,gif,bmp,png,tif) பைல்களாக மாற்ற



PDF பைல்களை எப்படி நாம் இமேஜ் பைல்களாக மாற்றுவது என்று இங்கு காணபோகிறோம். இந்த வேலையை ஒரு சிறிய மென்பொருள் நமக்கு எளிதாக செய்து முடிக்கிறது.
இந்த மென்பொருள் பதிவர்களுக்கு மிகவும் தேவையான மென்பொருள் ஏனென்றால் நாம் ஏதேனும்PDF பைல்களை நம் பதிவில் சேர்க்க வேண்டுமென்றால் அதனை
நேரடியாக சேர்க்க முடியாது அந்த பைல்களுக்கான Embeded உருவாக்க இன்னொரு தளத்தின் உதவியை நாட வேண்டிவரும். அதனால் நம் நேரம் தான் விரயம் ஆகும்.  அது மட்டுமில்லாமல் இன்னொரு தளத்தில் உறப்பினர் ஆக வேண்டும். இந்த குறையை தவிர்க்கவே இந்த அறிய மென்பொருள்.
மென்பொருளின் பயன்கள்: 

  • மிகச்சிறிய அளவே உடைய(1.9mb) முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
  • மற்ற கன்வெர்ட் மென்பொருட்களை காட்டிலும் 87% வேகமாக இயங்க கூடியது.
  • பேட்ச் மோடில் இயங்க கூடியது.
  • இந்த முறையில் நாம் Jpg, Gif, Bmp, Tif, Png ஆகிய பார்மட்களில் மாற்றி கொள்ளலாம்.
  • தேவையான பக்கத்தை மட்டும் தேர்வு செய்து மாற்றும் வசதி உள்ளது. 
  • ஒரு போல்டரை அப்படியே கொடுத்து மாற்றும் வசதி.
  • Windows 2000, XP, Vista or 7 ஆகிய இயங்கு தளங்களில் வேலை செய்கிறது.
பயன் படுத்தும் முறை: 
  • உங்களுக்கு வரும் exe பைலை உங்கள் கணினியில் Install செய்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் ADD என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் PDF பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளதை போல் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும்.
  • கடைசியில் கீழே/மேலே  உள்ள CONVERT என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்கள் PDF பைல் நீங்கள் தேர்வு செய்த இமேஜ் வடிவில் வந்து இருக்கும்.
  • அவ்வளவு தான் நீங்கள் நேரடியாக உங்கள் இமேஜ் பைலை உங்கள் தளத்தில்  தரவேற்றி கொள்ளலாம்.

No comments:

Post a Comment