இணையத்தில் இருந்து மில்லியன் கணக்கான வீடியோக்களை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்ய கட்டணமில்லா இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் aTube Catcher. இந்த மென்பொருள் மூலம் சமூக வீடியோ பகிர்வு இணைய தளங்களான MySpace™, Dailymotion™, Megavideo™, Yahoo™!, Metacafe™, Spike™, Megarotic™, Yahoo!™, Glob™o, RTVE™ மற்றும் பல ஆயிரக்கணக்கான தளங்களில் இருந்து வீடியோக்களை உங்கள் கணினி, மொபைல், IPAD, IPOD, PSP, GPS devices, MP4 Players, Android devices, DVD, VCD, MP3, Iphone போன்ற அனைத்து மல்டிமீடியா சாதனங்களுக்கும் தரவிறக்கம் செய்யலாம்.
3GP, 3G2, AVI, XVID, MP4, MP3, MP2, WMA, WMV, GIF, FLAC, WAV, PSP, MPG, VOB, OGG, MOV, AVI. போன்ற பல formatகளை சப்போர்ட் செய்யும் வகையில் இதன் கட்டமைப்பு உள்ளது.
இந்த மென்பொருள் மூலமாக எந்த விதமான third party software இல்லாமல் DVD/VCD யாக சிடியில் பதியலாம்.
screen recorder வசதி உள்ளது. இதன் மூலம் கணினி திரையில் நமக்கு தேவையானவற்றை ரெக்கார்ட் செய்யலாம். வீடியோ சாட்டிங், சினிமா பாடல்கள், ஆன்லைன் விவாதங்கள், ஆன்லைன் நேர்முக தேர்வுகள் என எல்லாவற்றையும் ரெக்கார்ட் செய்யலாம்.
MP3 பாடல்களை தரவிறக்கம் செய்ய தனியே ஒரு விண்டோ உள்ளது. இதில் search box இல் நமக்கு தேவையான பாடல்களின் குறிச்சொல்லை அளித்தால் அதற்கேற்ப பாடல்கள் சர்ச் ஆகும். இதில் நமக்கு தேவையான பாடல்களை மட்டும் தேர்வு செய்து தரவிறக்கம் செய்யலாம். கீழே படத்தில் ilaiyaraja songs என சர்ச் செய்துள்ளேன்.
இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யும் தளங்கள்:
இவ்வாறு இதன் வசதிகளை சொல்லிக் கொண்டே போகலாம். நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். இன்னும் நிறைய வசதிகளை அறிந்து கொள்வீர்கள். Multi language வசதி கொண்ட இந்த மென்பொருள் முற்றிலும் பாதுகாப்பான, இலவசமானது ஆகும்.
இந்த மென்பொருள் பெற்றுள்ள விருதுகளை பார்க்க இங்கே கிளிக்கவும்.
No comments:
Post a Comment