Sunday, June 30, 2013

கணினியில் உள்ள அனைத்து மென்பொருள்களின் License Key க்களை கண்டறிய பயன்படும் மென்பொருள்

கணினியில் சில சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மென்பொருட்களை நிறுவிப் பயன்படுத்திக்கொண்டிருப்போம். அவ்வாறு பயன்படுத்திக்கொண்டிருக்கும் மென்பொருள்களின் அனைத்து லைசென்ஸ் கீகளையும் நான் அறிந்து வைத்து பாதுகாப்பது  நல்லது.

காரணம் என்றாவது ஒருநாள் உங்களுடைய நண்பர்களின் கணினிக்கோ, அல்லது உங்களுடைய வேறொரு கணிக்கோ அம்மென்பொருள் தேவைப்படும் பட்சத்தில், அதை நிறுவும்பொழுது மென்பொருளுக்கான Software License Key கிடைக்காமல் தடுமாறுவோம். 


weenly free key recovery software

அந்த அவரசத்தில் அந்த மென்பொருளின் License Key-யை மறந்திருப்போம். அல்லது குறித்து வைத்த License Key கிடைக்காமல் போகும். இதபோன்ற பிரச்னைக்கு எளிய தீர்வை வழங்குகிறது Free Software License Key Recovery software. 

மென்பொருள் மூலம் உங்கள் கணினியில் உள்ள மென்பொருள்களின் அனைத்து Software License Key களையும் நாம் பெற முடியும். 
இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து, நிறுவியபின் திறக்கவும். 
இப்பொழுது உங்களுடைய கணினியில் உள்ள விண்டோஸ்(windows), எம்.எஸ். ஆபீஸ் (Ms Office), அடோபி போட்டோஷாப் (Adobe Photoshop) போன்ற முக்கியமான மென்பொருள்களின் License Keyக்களைக் காட்டும். 

உங்களுடைய கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்திருக்கும் அனைத்து மென்பொருள்களின் லைசென்ஸ் கீகளையும் காண மென்பொருளின் தலைப்பில் இருக்கும் Scan Plus என்பதை அழுத்த வேண்டும். அவ்வாறு Scan Plus என்பதை அழுத்தியவுடன் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் ஒவ்வொரு மென்பொருளுக்கான லைசென்ஸ் கீககளையும் அந்த விண்டோவில் நாம் காணலாம். 

அவ்வாறு காட்டப்படும் லைசென்ஸ்கீகளையும் அப்படியே காப்பி செய்தோ, அல்லது எழுதியோ வைத்துக்கொள்ளுங்கள். பிறிதொரு சமயத்தில் மென்பொருள்களை நிறுவும்பொழுது (software installation) கண்டிப்பாக இந்த லைசென்ஸ் கீகள் உங்களுக்குப் பயன்படும்.. 

மென்பொருளைத் தரவிறக்கும் கீழுள்ள சுட்டியைச் சுட்டவும்.
Download : Free Software Key Recovery software

No comments:

Post a Comment