ஒருசில நேரங்களில் நமக்கு ஃபேஸ்புக் கணக்கு தேவைப்படாது அப்போது அதனை செயல்படாது வைத்திருப்பது நல்லதா அல்லது முழுவதுமாக நீக்கம்செய்துவிடுவது நல்லதா என குழப்பம் ஏற்படும்
இந்த ஃபேஸ்புக் கணக்கு நமக்கு தேவைப்படாதபோது செயல்படாமல் வைத்திட்டால் நம்முடைய நண்பர்கள் நம்மைபறறிய விவரங்களையும் நம்முடைய உருவபடங்களையும் தெரிந்துகொள்ள முடியாது. புதியவர்கள் நம்மைபற்றிய விவரத்தை தேடி அறிந்து கொள்ளவே முடியாது
ஆனால் ஃபேஸ்புக் தளமானது இந்த விவரங்களை தன்னுடைய நினைவகத்தில் சேமித்து வைத்திருக்கும் இது ஒருதற்காலிகமான ஏற்பாடாகும் தேவைபடும்போது மீண்டும் செயல் படுமாறு செய்து நம்மை பற்றிய விவரங்களில் பழையநிலையை பராமரிக்கமுடியும்
இவ்வாறு செய்வதற்காக இந்த தளத்தின் மேலே கட்டளைபட்டியில்Account=> Account Settings=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.
உடன் தோன்றும் திரையின் இடதுபுறத்தில் உள்ள Security என்ற தாவிபொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.
பின்னர் விரியும் Security என்ற தாவியின் திரையில் Deactivate my account என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
அவ்வாறு செயற்படுத்தியவுடன் தோன்றிடும் திரையில் நம்முடைய கணக்கினை செயல்படாது வைத்திருப்பதற்கான காரணங்களை பட்டியலாக காண்பிக்கும் அவற்றுள் ஒன்றை தெரிவுசெய்து Confirmஎன்ற பொத்தானை சொடுக்கி நம்முடைய ஃபேஸ்புக் கணக்கின் கடவுச்சொற்களை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக
உடன் நம்முடைய கணக்கு செயல்படாததாக மாறிவிடும் மீண்டும் செயல்படுத்திட இந்த தளத்தில் நம்முடைய மின்னஞ்சல்முகவரியையும் கடவுச்சொற்களையும் உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக
ஆனால் நம்முடைய ஃபேஸ்புக் கணக்கை நீக்கம்செய்தால் நம்மைபற்றிய விவரமுழுவதும் நிரந்தரமாக நீக்கம்செய்துவிடும் நமக்கு ஃபேஸ்புக் கணக்கே தேவையில்லை எனும் போது மட்டும் நீக்கம் செய்வதற்கு என தனியான தொரு delete என்ற பொத்தான் எதுவும் இந்த தளத்தில் இல்லை ஆயினும் பின்வரும் இணைய முகவரியை இதற்காக பயன்படுத்தி கொள்ளலாம்https://www.facebook.com/help/contact.php?show_form=delete_account அல்லது “delete my account என்ற கட்டளையை செயற்படுத்துவதன்மூலம் இந்த தளத்திற்கு செல்லமுடியும் நீக்கம் செய்வதற்கான இணைப்பு முகவரியை சொடுக்கியவுடன் இந்த தளமானது this action is permanent and that you cannot reactivate.என்ற ஒரு எச்சரிக்கை செய்தியை நமக்கு தெரிவிக்கும் தொடர்ந்து கண்டிப்பாக நீக்கம் செய்யவிரும்பினால் Submit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
பின்னர் தோன்றிடும் திரையில் நம்முடைய கடவுச்சொல்லையும் கேப்ஷா எழுத்துகளையும் உள்ளீடுசெய்து Okay. என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் நம்முடைய கணக்கை நீக்கம் செய்யாமல் பராமரித்திட மீண்டும் ஒரு வாய்ப்பாக மேலும் 14 நாட்களுக்கு மட்டில் நம்கணக்கு பற்றிய விவரங்களை நீக்கம் செய்திடாமல் பராமரிப்பதாகவும் தேவையெனில் இந்த காலக்கெடுவிற்குள் நம்முடைய கணக்கை மீட்டு கொள்ளலாம் என்றும் எச்சரிக்கும்
அவ்வாறு அளிக்கபட்ட 14நாட்கள் கொடுமுடிந்தவுடன் பின்வருமாறு செய்தி உறுதி செய்து கொள்வதற்காக தோன்றிடும்
அதில் Confirm Deletion என்ற பொத்தானை சொடுக்கினால் முழுவதுமாக நம்முடைய ஃபேஸ் தளத்தின் கணக்கு நீக்கம் செய்யபட்டுவிடும் அல்லது மனம்மாறி Cancel Deletion என்ற பொத்தானை சொடுக்கினால் நம்டைய கணக்கு நீக்கம் செய்யாமல் பராமரிக்கபடு
ம்
ம்
No comments:
Post a Comment