பொதுவாக தொலைபேசிமூலம் உலகளாவிய அளவில் மற்றவர்களை அழைத்து அவர்களுடன் உரையாடுவது மிகவும் அதிக செலவுபிடிக்கும் செயலாகும் ஆயினும் இணைய இணைப்பின் மூலம் ஒலியை அறிந்து கொள்ளுதல் VOIP (Voice over internet protocol) என்ற கட்டணத்துடன் கூடிய வசதியானது இதனை எளிதாகவும் மிககுறைந்த செலவானதாகவும் ஆக்கிவிட்டது
ஆனால் செலவே இல்லாமல் இவ்வாறான வசதி கிடைக்குமா என மக்கள் அனைவரும் அவாவுடன் காத்திருக்கின்றனர் அவர்களுடைய அவாவை பூர்த்தி செய்யும் வண்ணம் ஸ்மார்ட் போன் என்ற வசதியானது தற்போது எந்த நேரத்திலும் உலகில் எந்த இடத்திலிருந்தும் செலவேயில்லாமல் பேசிமகிழ்ந்திடும் வாய்ப்பு கிடைக்கின்றது
ஆனால்இதற்காக ஒருசில நிறுவனங்கள் தங்களின் பயன்பாட்டினை முதலில் செலவேயில்லாமல் உலகில் எங்கிருந்தும் பேசலாம் என ஆசைவலையைவிரித்து மக்களை கவர்ந்தபின் சிறிது சிறிதாக பேசுவதற்கான கட்டணத்தை உயர்த்தி கொண்டே செல்வார்கள்
இவ்வாறான நிலையில் Viber என்ற பயன்பாடானது மக்கள் அனைவரும் கட்டணமே யில்லாமல் உலகளாவிய நிலையில் தமக்குள் பேசிஉரையாடிகொள்வதற்கும் குறுஞ்செய்தியை அனுப்புவதற்கும் உதவுகின்றது இது இலவசமாக Iphone, Andorid, Blackberry ,Windows ஆகிய செல்லிடத்து பேசிகளில் செயல்படுமாறு கிடைக்கின்றது
இந்த வசதியை பயன்படுத்து வதற்காக நாம் அழைக்க நினைக்கும் நபரும் இதே பயன்பாட்டினை பயன்படுத்துபவராக இருக்கவேண்டும் மேலும் வொய்பி அல்லது 3ஜி இணைய இணைப்பு பெற்றிருக்கவேண்டும் இதன் மூலம் வீடியோ அழைப்பைக்கூட செயல்படுத்திடமுடியும் என்பதே இதனுடைய தற்போதைய செய்தியாகும் இந்த பயன்பாட்டினை நம்முடைய ஸ்மார்ட் போனில் நிறுவி பயன்படுத்துவதற்காக http://www.viber.com/ என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்க
No comments:
Post a Comment